இங்கிலாந்தில் புதுவகை கொரோனா பரவல்… இந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்தில் புதுவகை கொரோனா பரவல்… இந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்!

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், புது அவதாரம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் 72-வது அடுத்த குடியரசு தின விழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே கடந்த நவம்பரில் பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான தொலைபேசி உரையாடலின்போது, 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க போரிஸ் ஜான்சனுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, குடியரசு விழாவில் கலந்து கொள்ள போரிஸ் ஜான்சன் சம்மதித்துள்ளார். ஆனால் இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது.பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

Related Posts