டக்கர் – விமர்சனம்!

கஷ்டப்பட்ட ஃபேமிலியில் பிறந்ததால் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.. அதுவும் அந்த பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நம்பும் நாயகனும் (சித்தார்த்), கையில் அபரிமிதமான அளவில் இருக்கும் பணத்தினால்தான் வாழ்வில் பல பிரச்சனைகள் வருகிறது என்று நம்பும் நாயகியும் (திவ்யான்ஷா) ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து பயணிக்க நேர்கிறது. அந்த பயணத்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது, என்பதே ’டக்கர்’ படத்தின் கதை.
நடிப்பு எனப் பார்த்தால் சித்தார்த், ஏழை குடும்பத்துப் பையனாக நடிக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது, சாக்லேட் பாய் லிஸ்டில் இருந்தவர் ஆக்ஷன் ஹீரோ என்று பெயரெடுக்க முயல்கிறார். ஆனால் அவரது அழுத்தமே இல்லாத டெம்ப்ளேட்டான நடிப்பு அதைத் தடுக்கிறது. ஆனால் ரொமான்ஸில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நாயகி திவ்யன்ஷா கௌஷிக் எல்லா காட்சிகளிலும் அழகாக வருகிறார்.. ஒட்டு மொத்த படத்தை கவர்ச்சிகரமாக மாற்ற முயல்கிறார். ஆனால் அவரது நடிப்பும், தமிழுக்கேற்ற லிப் சிங்கும் அதை தடுத்து விடுகிறது .
யோகிபாபு படத்தில் பல காட்சிகளில் வருகிறார், அவரது ஹூமரும், ஒன்லைனர் காமெடிகளும் வழக்கம் போல் எடுபடவில்லை.. ‘வில்லனாக’ வரும் அபிமன்யு சிங்ரோல் கொஞ்சமும் ஒட்டவில்லை..சில பல காட்சிகளில் காமெடிக்கு உதவுகிறார் என்பதுதான் சோகம்..
நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்தை ஓரளவிற்கு காப்பாற்றி இருக்கிறது .அவருடைய பின்னணி இசை அதிலும் ரொமான்ஸ் சீன்கள் இவரின் சப்போர்ட்டால் படத்தின் வேகமே எகிறுகிறது.
பணம் மற்றும் வாழ்க்கை பற்றி மாறுபட்ட கருத்துகள் கொண்ட இரண்டு பேரை வைத்து கதை பின்ன முயன்றிருக்கும் இயக்குநர் அதைத் திரைக்கதையாக்குவதில் கோட்டை விட்டு விட்டதால் டக்கர் – வேஸ்டாகி விட்டது
மார்க் 2/5