TTF வாசன் மாதிரி வட்டு கேசுகளைப் பார்த்துக் கெட்டு போகும் இளசுகள்!

TTF வாசன் மாதிரி வட்டு கேசுகளைப் பார்த்துக் கெட்டு போகும் இளசுகள்!

ளர்ச்சி படிநிலையில் அடையாள சிக்கல் கட்டாயம் வந்து போகும் காலம் பதின் பருவம். விதிகளை மீறும் எது ஒன்றையும் experiment செய்து பார்க்க முனையும் வயதுகூட அதுதான். இந்த பருவத்தினர் இடையே அதிக ரசிகர்கள் உள்ளவன் வாசன். யூடியூபரான இவர், தனது உயர் ரக பைக்கில் டிராவல் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறான் .இவனை கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் ஒரு ஜூன் 30 ஆம் தேதி தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்த இவர் கோயம்புத்தூரில் தனது யூடியூப் சொந்தங்களுடன் ஒரு மீட் அப் வைத்திருந்தார். அதில் எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர். அந்த மீட் அப் தான் TTF வாசனை பெரிதளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படி 2k கிட்ஸ் மத்தியில் பெரிய செலிபிரிட்டியாக வலம் வரும் TTF வாசன், தனது பைக்கில் 238 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோவை பதிவிடுவது வாடிக்கை. கூடவே பைக்கில் சாகசம் செய்வதுமுண்டு. ஆகவே அவன் செய்யும் சேட்டைகளை எல்லாமே சிறார்கள் இடையே செல்வாக்கு செலுத்தவே செய்யும். ஆனால் பெற்றோரே… நீங்கள் பெற்றெடுத்த உங்கள் பிள்ளைகளின் மூளை அசுகங்கள் குறித்து உங்களுக்கு நன்றாகத் தெரியும்! நீங்கள் பாட்டுக்குக் குரங்கின் கையில் துப்பாக்கியைக் கொடுப்பது போல 18 வயதுக்கு முன்னரே அதிவேகக் குதிரைத் திறன்கொண்ட வாகனங்களை வாங்கிக் கொடுத்து விடுகிறீர்கள்!

கை நிரம்பக் காசு இருக்கிறதென்றால் அதை வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்! அறிவும் செயல்பாட்டுத் திறனும் அங்ஙற்றத்தில் இருக்கும் இந்த ஈராயிரக் குருவிகளுக்குப் பருந்தும் தெரியாது, பனங்கொட்டையும் தெரியாது! அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது! தலையில் இடிகொண்ட ஆடு சிங்கக்குகை வாயிலில் தாண்டவமாடிய கதையாக உங்கள் பிள்ளைகள் சாலையில் காட்டும் கோமாளித் தனங்களால் அவர்கள் செத்தாலும் பரவாயில்லை… சம்மந்தமே இல்லாதவர்கள் ஏன் சாக வேண்டும்?

மேலும் இருசக்கர, நாற்சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்ய விரும்பினால் அதற்குரிய பயிற்சி பெற்று அதற்கான மைதானங்களில்தான் செய்யவேண்டும்..!பொதுச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்குமேல் செல்வது குற்றம். இதனால் சாலையில் செல்லும் அப்பாவிப் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுச்சாலையில் வீரசாகசம் செய்ய முயலும் சமூகவிரோதிகளை கொலைமுயற்சி, தற்கொலை முயற்சி போன்ற வழக்குகளில் தண்டிக்க வேண்டும்.

நான்கு நாட்களுக்கு முன்னர் 15 வயது கொண்ட சொந்தக் காரப் பையன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் போய் ஒருவர் மீதுமோதி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருக்கிறான். இரண்டு மூன்று அறுவை சிகிச்சை முடிந்தாலும் கூட அவனால் வாழ்க்கை முழுக்கவும் எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் 90-10 விகிதத்தில் சொல்லியிருக்கிறார்கள். வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளை. காலதாமதமாகப் பிறந்து நான்கு வயதில் தந்தையை இழந்தவன். யோசித்துப் பாருங்கள்!

காசு செலவு, அலைச்சல், வழக்கு, மன உளைச்சல்…? வண்டி வாங்கித் தரவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று உங்கள் பிள்ளைகள் மிரட்டினால் நீங்களேஅவர்களை மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். மற்றபடி இந்த TTF வாசன் மாதிரி வட்டு கேசுகளை ராஜாவூரிலோ, ஊளம்பாறையிலோக் கொண்டு போய் சங்கிலியில் பிணைத்துக் கட்டிப் போடுங்கள்..

இம்மாதிரிக் பைத்தியங்கள் இருந்தாலென்ன? மரித்தாலென்ன? கைகள், கால்கள், தாடை, கபாலம், தண்டுவடம் முதற்கொண்டு விதைகள் வரைக்கும் பிளந்தாலும் இம்மாதிரிக் கோமாளிகள் திருந்துவதில்லை… இந்த மூடனால் யாருக்கும் பத்து பைசா பிரயோஜனமில்லை!

பிரபு தர்மராஜ்

error: Content is protected !!