டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய பிரத்யேக சமூக வலைத்தளம் :ட்ரூத் சோசியல்!

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய பிரத்யேக சமூக வலைத்தளம் :ட்ரூத் சோசியல்!

ட்ரூத் சோசியல் (Truth Social) என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்றை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் போன வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கத்தின் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால், அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. தனது கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தற்போதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ட்ரம்ப் தனியாக Truth Social என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். இதன் பீட்டா பதிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், dவிட்டரில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகில் நாம் வாழ்கிறோம். இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு அதிபர் ஜோ பிடன் ஏதும் செய்யாமல் இருக்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

https://twitter.com/aanthaireporter/status/1451044719186747397

மேலும் ‘ட்ரூத் சோஷியல்’ மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம். வரும் நவ., மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, செய்திகள் கொண்ட வீடியோ சேவையையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம்’ என்றும் தெரிவித்தார்.

 

error: Content is protected !!