உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் & பிரதமர் நரேந்திர மோடி போனில் நலம் விசாரிப்பு.

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட  சிரமங்கள் & பிரதமர் நரேந்திர மோடி போனில்  நலம் விசாரிப்பு.

டந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதும் அவர்களை பலவித இன்னல்களுக்கிடையே மீட்டதும் தெரிந்திருக்கும்.. இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட நிலையில் சிக்கி இருந்த போது நிகழ்ந்த உணர்வுகள், அனுபவம் குறித்து பகிரும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி மெய்சிலிர்க்க வைக்கிறது.. .!

நாங்கள் சுரங்கத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக வெளியேறியபோது திடீரென சரிவு ஏற்பட்டது. முதல் 18 மணி நேரம் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. பிறகுதான் நாங்கள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தோம்.பலத்த சத்தங்கள் காற்றைத் துளைத்தன. நாங்கள் அனைவரும் சுரங்கப் பாதைக்குள் புதைக்கப்படுவோம் என்றுதான் நினைத்தோம். முதல் இரண்டு நாட்களிலே எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். பின்னர் தண்ணீர் குழாய் ஒன்றை திறந்துவிட்டு நாங்கள் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டதை தெரியப்படுத்த முயற்சித்தோம். இந்த யோசனை எங்களுக்கு உதவியது. இந்த தண்ணீர் குழாய் வழியாகதான் எங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. முதல் இரண்டு நாட்களிலே எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். முதல் 10 நாட்கள் நாங்கள் எங்களுடைய தாகத்தைத் தணிக்க பாறைகளிலிருந்து சொட்டும் தண்ணீரை குடித்தும், அரிசிப் பொரியை ‘muri’ (puffed rice) சாப்பிட்டும் உயிர் பிழைத்தோம். இது பயங்கரமான சோகம். ஏறக்குறைய 70 மணி நேரத்துக்குப் பிறகுதான் அதிகாரிகளின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது, அந்த தொடர்புதான் நாங்கள் உயிர் வாழ்வதற்கான முதல் நம்பிக்கையை கொடுத்தது.

மேற்பார்வையாளர்கள் இருவர், பாறைகளின் வழியே சொட்டும் தண்ணீரைக் குடிக்கச் சொன்னார்கள். நாங்களும் அதையே செய்தோம். எங்களுக்கும் மனதில் ஏதோ ஒரு விரக்தி ஏற்பட்டது. இறுதியாக, வெளியிலிருந்து எங்களுடன் தொடர்புகொள்பவர்களின் குரல்களைக் கேட்டபோதுதான், உறுதியான நம்பிக்கையும், உயிர் வாழ்வதற்கான நம்பிக்கையும் எங்களுக்கு வந்தது. 10 நாட்களுக்கு பிறகுதான் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், சாதம், சப்பாத்தி போன்ற சூடான உணவுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகுதான் எங்களுடைய வாழ்க்கை வழக்கமானதாக மாறியது. நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, தீவிரமாக பிரார்த்தனை செய்தோம். இறுதியாக கடவுளும் எங்களுக்குச் செவிசாய்த்தார்` என்றனர்.

தொழிலாளர்களுடன் மோடி பேச்சு

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனையும் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 41 தொழிலாளர்களுடன் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

முன்னதாக நேற்று இரவு மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர், ‘சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்டது உணர்ச்சிபூர்வமானது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும் வலிமையும் ஊக்கம் அளிக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் வெளிப்படுத்திய பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!