டாக்ஸிக் டீசர்:ரத்தம் தெறிக்கும் ராட்சத சினிமா உலகம்..மிரட்டும் யாஷ்!
2026-ஆம் ஆண்டின் மோஸ்ட் வான்டட் படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-ups) படத்தின் டீசர் வெளியாகி இணையத்தைக் குலுக்கி வருகிறது. ‘கேஜிஎஃப்’ ராக்கி பாய்க்குப் பிறகு யாஷ் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இது ஒரு ‘மெகா’ சர்ப்ரைஸ்.
அவதாரம் எடுத்த ‘ராயா’ சமீபகாலமாக வெளியான நயன்தாரா (கங்கா), கியாரா அத்வானி (நாடியா), ஹூமா குரேஷி (எலிசபெத்) ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்களே எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. இப்போது டீசரில் ‘ராயா’வாக யாஷ் காட்டியிருக்கும் அந்த அதிரடி மாற்றம் வேற லெவல்! வெறும் உடல்வாகு மாற்றம் மட்டுமல்ல, அவரது பார்வையும், அந்த ‘ஸ்டைலிஷ்’ மேனரிசமும் ஒரு புதிய யாஷை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

சர்க்கஸ் டூ ஈஸ்ட் ஏசியா!
இந்த டீசர் ஒரு வண்ணமயமான, அதே சமயம் ரத்தம் தெறிக்கும் இருண்ட உலகத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது. ஒரு சர்க்கஸ் பின்னணியில் தொடங்கி, கிழக்கு ஆசியாவின் நிலப்பரப்பு வரை கதை நகர்கிறது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திரைக்கதை, ஆக்ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாத ஒரு மாஸ் மசாலா என்பதை டீசர் உறுதி செய்கிறது.
தயாரிப்பாளர்களின் ‘கிரேஸி’ பிராமிஸ்!
“It’s gonna get crazyyyy” என்று தயாரிப்பாளர்கள் சொன்னது போலவே, டீசரின் ஒவ்வொரு பிரேமும் மிரட்டலாக இருக்கிறது. கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
ரிலீஸ் எப்போ?
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், மார்ச் 19, 2026 அன்று ஈத், உகாதி பண்டிகைகளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
ராக்கிங் ஸ்டாரின் இந்த ‘டாக்ஸிக்’ ஆட்டம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளைத் தகர்க்கும் என்பதில் சந்தேகமில்லை!


