நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறதுஇ!

நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறதுஇ!

நம் நாட்டில் இயங்கும் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல் கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது.

தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் – “நாக்” செய்து வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு – யு.ஜி.சி., யின் கீழ் செயல்படும் இந்த கவுன்சில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்தால், தங்கள் குழுவினரை அனுப்பி ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில், கல்வி நிறுவனத்திற்கு, “ஏ, பி” என, “கிரேடு” வழங்கப்படும். இந்த அங்கீகாரம் பெற்றால், கல்லூரிகள், பல்கலைக்கழங்களில், மாணவர்கள் சேர்க்கையும்; நிதி அதிகரிக்கும். எனவே அங்கீகாரம் பெற, அனைத்து கல்வி நிறுவனங்களும் முனைப்பு காட்டும். தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைகளில் 11ம், கல்லூரிகளில் 371ம், “நாக்” அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில்

உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார குழுமத்தின் அனுமதி பெறுவது தற்போதுவரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.

இதனை மாற்றுவதற்காக அனைத்து கல்லூரிகளும் நாக்அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர நிரந்தர இணைப்பு மட்டுமில்லாமல் தற்காலிக இணைப்பு பெற்று இயங்கும் கல்லூரிகளும் யுஜிசி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்.

ஆய்வின்போது குறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மாணவர் கள் சேர்க்கைக்கு தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வரைவு தொடர்பாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அக்டோபர் 21ம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் கூடுதல் தகவல்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

error: Content is protected !!