சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்! –

சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்! –

அப்பாஸ் அக்பர் இயக்கத்தில்  கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் நடிப்பில் தயாரான படம் – செ டூ  நிஜமாகவே   சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான அப்பாஸ் அக்பர், ‘வேட்டை’ என்கிற டிவி சீரியஸ் மற்றும் வேறு சில குறும்படங்களாலும் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் 2011ஆம் ஆண்டில் இயக்குனர் வெங்கட்பிரபுவை சந்தித்து, ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்கிற தனது கதையை சொல்லி தயாரிக்குமாறு கேட்டார். ஆனால், அது கை கூடி வராததால் 2014ஆம் ஆண்டில் சத்யா (நடிகர் ஆர்யாவின் சகோதரர்) மற்றும் ஹெபா பட்டேலை வைத்து தன் சொந்த தயாரிப்பிலேயே படத்தை தொடங்கினார். படம் தொடங்கி கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் சத்யா இப்படத்திலிருந்து வெளியேறி விட்டார். இதன் பிறகு இசையமைப்பாளர் கிப்ரான் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Media Development Authority தயாரிப்பில், 2015ஆம் ஆண்டில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து மறுபடியும் ரிஷூட் பண்ணி   படத்தை முடிச்சு ரிலீசும் பண்ணிடாய்ங்க

ஆம்.. அப்படியெல்லாம் கஷ்டப்பட அந்த  அறிமுக இயக்குநர் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தையே ஒரு கதையாக்கி அதை ஒரு ஜாலியான காமெடியுடன் கலந்து முழுமையான ஒரு பயணமாக மாற்றி தன் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது தன் சினிமா முயற்சிகள் தோல்வியில் முடிந்த ஒரு இயக்குநர் தன் முதல்பட கனவை நனவாக்க நண்பன் உதவியில் சென்னைலிருந்து சிங்கப்பூர் பயணமாகிறார். அங்கே பாஸ்போர்ட் தொலைத்து நடுத்தெருவிற்கு வருபவருக்கு ஒரு படமியக்கும் வாய்ப்பு வருறது. அதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதை அழகான காதலுடன் காமெடி ரைடாக தந்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஆரம்பக்காட்சிகளிலேயே புதுமையான ஐடியாக்களை கதை சொல்வதில் புகுத்தி ரசிகனை உள்ளிழுத்து விடுகிறார். இது காதல் படமா ? சீரியஸ் சினிமாவா என யோசிக்கும் நேரத்தில் முழுக் காமெடியாக்கி நம்மை வாய் விட்டு சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் தடதடவென மாறிக்கொண்டே இருக்கும் திரைக்கதை யில் வசனங்கள் அற்புதம். வசனங்கள் பல இடத்தில் கைதட்டலை வர வைக்கிறது.

எல்லோருக்கும் ரெண்டு முகமிருக்கிறது. அதை அவர்கள் நமக்கு காட்டுவதில்லை., நீயும் பார்க்க மாட்ற’, ‘நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், நம்மளை விட அதிகமா கஷ்டப்படுறவங்க இருந்துட்டேதான் இருப்பாங்க’, ‘உன்கிட்ட என்ன இருக்குன்‌னு பார்க்குறதை விட்டுட்டு, என்ன இல்லைன்னே யோசிச்சுட்டு இருக்க…’, ‘சாகப்போ றோமுன்னு  தெரிஞ்சதும், எல்லோரும் பயந்து போய் நல்லது பண்றாங்க… சாவுக்கும், நல்லதுக்கும் என்னங்க கனெக்ஷன்?’  ‘நாம் பிறக்கும் முன் நாம் இந்த உலகில் இல்லை எனும்போது ஏற்கனவே இறப்பை பார்த்து விட்டோம் அதனால் இறப்பை கண்டு பயப்படத்தேவை யில்லை என ஒவ்வொரு வசனங்களிலும் மனதை அள்ளும் அ நேரத்தில் காமெடி வசனங்களிலும் கலக்குகிறார்கள்.

இந்த இளம் புது – இயக்குனருக்கு திரையில் ரசிகனை கட்டிவைக்கும் திறமை வாய்த்திருக்கிறது. எளிதான ஒவ்வொரு காட்சியையும் ஒரு காமெடி குதூகலமாக மாற்றிவிடுகிறார். ஹீரோ நண்பனாக வரும் அந்த ஒளிப்பதிவாளர் காமெடியில் அரங்கம் அதிர்கிறது.கிளைமாக்ஸ் நோக்கி நகரும் அந்தக் கடத்தல் காட்சிகளில் ஃபிரேமில் வரும் ஒவ்வொருவரும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
இதனிடையே தன் சொந்தத்தயாரிப்பு என்பதாலோ என்னவோ ஜிப்ரான் இசையில் தனித்து தெரிகிறார். டைட்டில் கார்டில் ஆரம்பிக்கும் அதகள இசை ஒவ்வொரு காட்சியின் உணர்வை அடுத்த தளத்திற்கு உயர்த்துகிறது. பாடல்கள் அனைத்தும் படத்திற்கு சுவை கூட்டுகின்றன. ஒளிப்பதிவில் புதுமுகம் கார்த்திக் கவனிக்க வைக்கிறார். சிங்கப்பூரை முழு அழகாய் காமிராவால் காட்டியிருக்கிறார். எடிட்டிங் படத்தின் பெரும் பலமாய் மாறியுள்ளது.

தமிழ் சினிமாவை மாற்றும் படமல்ல இது காமெடிப்படம் என முடிவு செய்வது அதை ரசிகனுக்கு அட்டகாசமாக கடத்திய விதத்தில் ஜெயித்திருக்கிறது படக்குழு. வாழ்த்துக்கள். குடும்பத்துடன் பார்க்க ஒரு காமெடி ரைட் இந்த சென்னை டூ சிங்கப்பூர்.

மார்க் 5 / 2.75

கதிரவன்

error: Content is protected !!