ஸ்டார் – விமர்சனம்!

ஸ்டார் – விமர்சனம்!

ன்றைய இளசுகளின் மனசாட்சியாக வந்த பியார் பிரேமா காதல் படம் மூலம் கவனம் ஈர்த்த இளன், ஸ்டார் படத்தை டைரக்ட் செய்துள்ளர். வளரிளம் நடிகர் கவினுடன் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட பலர் நடிக்க, யுவன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக வெளியான இந்த ஸ்டார் ட்ரெய்லர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது. கூடவே ஸ்டார் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் இந்தப் படத்துக்கு செம்ம ஹைப் கொடுத்திருந்தது. இதனால் ஸ்டார் படத்துக்கான ஆன்லைன் புக்கிங் தாறுமாறாக காணப்பட்ட நிலையில் தற்போது ரிலீசாகி கனவுகளுக்காக இறுதி வரை போராடும் அனைவரும் ஸ்டார் தான் என்ரு ஒவ்வொரு ரசினனையும் ஃபீல் பண்ண வைப்பதில் பாஸ் மார்க் வாங்கி விட்டது என்பதே நிஜம்

டைட்டிலிலும், ட்ரெயிலரிலும் து ஒரு நடிகனின் கதை என்பதை காட்டி விட்டப்படி சினிமாவில் ஆக்டராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த நாயகனின் அப்பா அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகி விடுகிறார்.அதே சமயம் தன் மகன் கலையை ( கவின்) நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார். கலையும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர கவனம் செலுத்துகிறான்.ஆனால், அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு இன்ஜினியரிங் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவோடு தொடர்ந்து பயணிக்கிறார். அக்காலக்கட்டத்தில் அவனது வாழ்வில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகின்றனர். காதல் அவனை உற்சாகமூட்டுவதுடன் மனதை உடைத்தும் விடுகிறது.. இந்நிலையில் எதிர்பாரா விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறான். . அதன் பிறகு அவன் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது. காதலி அவனை விட்டு பிரிகிறாள். நண்பர்கள் மட்டுமே உடன் இருக்கின்றனர். புதிய காதலி அவனுக்கு தெம்பூட்டுகிறாள். இறுதியில் ஆனது என்ன என்பதை யூகிக்க முடியாத விதத்தில் சொல்லி இருப்பதே இப்படத்தின் கதை.

ஜஸ்ட் சாக்லேட் பாயாக வந்து போய் கொண்டிருந்த கவின் இதில் ஸ்கூல் ஸ்டூடண்ட், காலேஜ் பாய், இளைஞனாக, ஆபிசில் ஒர்க் செய்யும் மிடிக் கிளாஸ் மேனாக “கலையரசன்” கேரக்டருக்குகு பக்காவாக பொருந்துகிறார். வழக்கமான அவரது ஆட்டம் பாட்டம் உற்சாகம் என்று எல்லாமே இளவட்டங்களை துள்ளல்போட வைக்கிறது, அதே சமயம் பல சீன்களில் அடடே சொல்ல வைத்து விடுகிறார் ,.நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவருக்கும் திரைக்கதையில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக புரிந்து தங்கள் பங்களிப்பை அளித்துள்ளார்கள்..ஹீரோ கவினின் அப்பாவாக நடித்திருக்கும் லால் இயல்பான நடிப்பு மூலம் கவர்ந்தாலும், வசன உச்சரிப்பில் சற்று தடுமாறுகிறார். அதிலும், அவர் பேசும் தமிழ் வார்த்தைகள் சில சரியாக புரியாதபடி இருக்கிறது. கவினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் சில இடங்களில் ஓவர் ஆக்ட் கொடுத்து சிரிக்க வைத்து விடுகிறார்.இதை எல்லாம் தாண்டி சுகுமார் ரோல் பலே.

ஸ்டார்படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லப்படும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை. பெரும்பாலான கதை, கதை 80, 90களில் நடக்கும் கதையாக இருந்தாலும் இசை மட்டும் 2கேயின் வேகத்துடன் அரங்கை சுழன்றடிக்க செய்கிறது. கேமராமேன் எழில் அரசின் கைவண்ணத்தில் கிளைமாக்ஸ் காட்சி அசர செய்கிறது. . எடிட்டர் ப்ரதீப் ராகவ்வின் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம்.

மேலும் இது சரியில்லை, அது அப்படி இருந்திருக்கலாம் என்று சொல்ல சில பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு சீனில் கூட முகம் சுழிக்கும் வகையிலான காட்சி இல்லாமல் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்ததற்கு இளனை பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்ததில் இந்த ஸ்டார் – மூன்றரை ஸ்டார் வாங்கி விட்டது!

மார்க் 3.5 /5

error: Content is protected !!