திருச்சூர் பூரம், கும்பமேளா திருவிழாவில் தாக்குதல்! – ஐ.எஸ். தீவிரவாதிகள் ‘வாட்ஸ் அப்’ மிரட்டல்

திருச்சூர் பூரம், கும்பமேளா திருவிழாவில் தாக்குதல்! – ஐ.எஸ். தீவிரவாதிகள் ‘வாட்ஸ் அப்’ மிரட்டல்

கேரளாவைச்சேர்ந்த 100 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் கேரள போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்,  ஐ.எஸ். தீவிரவாதிகள் பெயரில் வாட்ஸ் அப் மூலம் மலையாளத்தில் யாரோ பேசுகிற மிரட்டல் வந்துள்ளது. அதில். “மதநம்பிக்கையற்ற மக்கள், முஸ்லிம் மதத்துக்கு மாற வேண்டும். அது முடியாவிட்டால் மக்கள், முஸ்லிம் மதத்தை வளர்க்க வும், ஐ.எஸ். அமைப்புக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும்.. உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உணவில் விஷம் கலப்பது, திருச்சூர் பூரம், கும்பமேளாவில்  மக்கள் கூட்டத்தில் லாரிகளை  விட்டு ஏற்றுவது போன்ற தாக்குதல்களை  நடத்த இருக்கிறோம்.

உலகம் முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலைத்தான் நடத்துகிறார்கள். சமீபத்தில் எங்களின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ்நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கி யால் சுட்டு ஏராளானவர்களை கொன்றார். உலகில் ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. உண்மையில் கடைசி நபர் இருக்கும்வரை உலகில் போராடுவோம்’’ என  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து மத்திய புலனாய்வு பிரிவின் கவனத்துக்கு கேரள போலீசார்  கொண்டு சென்றுள்ளனர். கேரள போலீசாரும் இந்த வாட்ஸ்அப்மிரட்டல் குறித்து தீவிர புலனாய்வு விசாரணை நடத்தினர். இதில் சவூதிஅரேபியா பகுதியில் இருந்து இந்த வாட்ஸ் அப் மிரட்டல் வந்தது தெரியவந்துள்ளது. சமீபத்தில் காசர்கோடு நகரைச் சேர்ந்த அப்துல் ரசீத்  அப்துல்லா  என்பவர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார்.

அவரது குரல் போன்று இருப்பதாக சந்தேகிக்கிறோம். இது குறித்து தீவரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என போலீசார் கூறினர். ஆனால் கேரள மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் இதை வெளியிட்டிருக்கலாம் என மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

error: Content is protected !!