மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொலைபேசி சேவை!

மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொலைபேசி சேவை!

தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டுக்களுக்கு அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. இந்த மோசடியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து, பொதுமக்களை காப்பாற்றும் வகையில் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவை 044-64500155 என்ற தொலைபேசி எண்ணில் இயங்கி வருகிறது. இந்த தொலைபேசி சேவை மூலம், பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் பெற்றுள்ளதா, அதன் உரிமையாளர்கள் வழக்குகள் உள்ளதா போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். மேலும் பொது மக்கள் தங்களுக்குத் தெரிந்த பொருளாதார குற்றங்கள் குறித்த தகவல்களை eowscambuster@gmail.மற்றும் [email protected].என்ற இ மெயில் மூலமோ அல்ல்து 9840584729 என்னும் எண்ணுக்கு
எஸ் எம் எஸ் அனுப்பியோ தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
economic offence
இது குறித்து அந்த பிரிவு ஏ.டி.ஜி.பி. பிரதிப் வி.பிலிப் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,”தமிழக பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்தாண்டு ஜனவரி வரை 1701 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் 13,91,176 பேரிடம் ரூ.3956.33 கோடி பணத்தை நிதி நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன. இதில் 7,02,531 பேரிடம் ரூ.1367.90 கோடி மீட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குத் தொடர்புடைய ரூ.1777.45 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டுக்களுக்கு அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. இந்த மோசடியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து, பொதுமக்களை காப்பாற்றும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் உரிமம் பெறாமலேயே பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி முதலீட்டு திட்டங்களை அறிவித்து, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வருகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவை 044-64500155 என்ற தொலைபேசி எண்ணில் இயங்கி வருகிறது. இந்த தொலைபேசி சேவை மூலம், பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் பெற்றுள்ளதா, அதன் உரிமையாளர்கள் வழக்குகள் உள்ளதா போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். மேலும இந்திய ரிசர்வ வங்கி உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்.இதற்காக அந்த தொலைபேசி சர்வரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடி நிதி நிறுவனங்களி பெயர், அதன் உரிமையாளர்கள் பெயர், அந்த நிறுவனங்களின் பிற தகவல்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.இந்த சேவை மோசடி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டாளர்களை எச்சரிப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை. இந்த தொலைபேசி சேவையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் ஜின்ஜின்வாலா உதவியுடன் யூனிபோர் என்ற மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் உருவாகியுள்ளது.”மேலும் பொது மக்கள் தங்களுக்குத் தெரிந்த பொருளாதார குற்றங்கள் குறித்த தகவல்களை eowscambuster@gmail.மற்றும் [email protected].என்ற இ மெயில் மூலமோ அல்ல்து 9840584729 என்னும் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியோ தகவல் தெரிவிக்கலாம்என்றார் அவர்.

error: Content is protected !!