இந்திய ஹாக்கி அணி : ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதனை!- வீடியோ!

இந்திய ஹாக்கி அணி : ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று  சாதனை!- வீடியோ!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பாஸ்கர் தலைமையிலான டீம்டோதங்கப்பதக்கம் வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை என்றிருந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று மோதின. ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஜெர்மனி, இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இதுவரை 5 முறை இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதியுள்ள போட்டிகளில். 1 முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை நடந்த மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, அந்த ஷாட்டை ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுக்க இந்தியா அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தியா தரப்பில் 17வது நிமிடத்தில் சிம்ரன் ஜித் சிங் முதல் கோலை அடித்தார். பிறகு ஜெர்மனி 2 கோல்களை அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு 27வது நிமிடத்தில் ஹர்திக், 29வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத், 31-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங், 34வது நிமிடத்தில் மீண்டும் சிம்ரன் ஜித் சிங் 5வது கோலை அடித்தார். அதன் பிறகு ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. பிறகு ஜெர்மனி தாக்குதலை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமையில் வெற்றிகரமாகத் தடுத்து வரலாறு படைத்தது.

error: Content is protected !!