எந்த பொருளைப் போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு இது! -வீடியோ
உலகத்தில் எத்தனையோ கிணறுகள் உள்ளன, இந்த கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன. அதென்ன தெரியுமா?

வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள். கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.
இதனிடையே இங்கிலாந்து யார்க்ஷயரில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. இதனை பார்க்க ஒர் நாளைக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றவண்ணம் தான் இருகின்றனர். அப்படி என்னதான் இந்த கிணற்றின் அமானுஷயம் என்ற கேள்வி உங்களிடத்தில் எழுகின்றாதா? இந்த கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறிவிடுகின்றதாம். இது உங்களால் நம்ப முடியாத கருத்தாக அமைந்தாலும் அத தான் உண்மை.
இக்கிணற்றை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட அன்றாடம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் குவிந்தவண்ணமே உள்ளனர். சில பொருட்களை கயிற்றால் கட்டி, கிணற்றுக்குள் தொங்கவிட்டுச் சென்று ஒரு வாரம் கழித்து அது கல்லாக மாறும் அதிசயத்தைப் பார்க்கின்றனர்.மேலும் கிணற்றுக்குள் போடப்படும் பொம்மைகள், சைக்கிள், கிரிக்கெட் பேட் என அனைத்துமே கல்லாக மாறிவிடுகின்றன.
https://www.youtube.com/watch?v=Ns114t50CtM
பெரும்பாலும் இங்கு டெடி பியர் பொம்மைகள் தான் அதிகமாக கிணற்றுக்குள் போடப்படுகின்றது. இதன் பொருட்டே கிணற்றுக்கு அருகில் பல பொம்மை கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. அங்கே செல்லும் பலரும் அங்கேயே பொம்மைகளை வாங்கி அந்த கிணற்றுக்குள் போட்டுவிட்டுச் செல்கின்றார்கள்.
இதையடுத்து இங்கு வாழும் மனிதர்கள் சிலர் கிணற்றில் கடவுள் வசிக்கிறார் என்று கூறினாலும் இன்னொரு தரப்பினால் இக்கிணற்றில் ஆவிகள் இருக்கின்றது என பல கதைகள் சொல்லப்பட்டவருகின்றது என்றாலும் நடப்பதென்னவோ உண்மை.


