டிஜிட்டல் தலைமுறையின் ஆன்மீகத் தேடல்:ஜென்-இசட் ஏன் மாறுகிறார்கள்?
உலகம் முழுவதும் உள்ள நவீன இளைஞர்கள், குறிப்பாக 1990களின் பிற்பகுதியிலிருந்து 2010 வரை பிறந்த ‘ஜென்-இசட்’ தலைமுறையினர், மீண்டும் மத நம்பிக்கைகளை நோக்கித் திரும்புவது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் தேவாலயங்களில் நீண்ட வரிசையில் நிற்கும் இளைஞர்களுக்கும், இந்தியாவின் ஆன்மீகத் தலங்களில் குவியும் இளைஞர்களுக்கும் பின்னால் ஒரே மாதிரியான காரணங்கள் இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும்போது ஆன்மீகம் வளர்வது முரணாகத் தோன்றலாம். ஆனால், அறிவியல் தரும் வசதிகளால் வழங்க முடியாத ‘அக அமைதியை’ ஆன்மீகம் வழங்குகிறது. நியூயார்க்காக இருந்தாலும் சரி, வாரணாசியாக இருந்தாலும் சரி… அமைதி தேடும் ஆன்மாக்களின் தேடல் ஒன்றாகவே இருக்கிறது.

1. டிஜிட்டல் தனிமைக்கு எதிரான மருந்து
அமெரிக்க இளைஞர்களாக இருந்தாலும் சரி, இந்திய இளைஞர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ‘டிஜிட்டல் சோர்வு’ (Digital Burnout).
-
மேற்கத்திய சூழல்: சமூக ஊடகங்களின் ‘அல்காரிதம்’ வாழ்க்கையில் சலிப்படைந்த நியூயார்க் இளைஞர்கள், அமைதி தேடி தேவாலயங்களின் மௌனத்தை நாடுகிறார்கள்.
-
இந்தியச் சூழல்: இந்தியாவில் இதே போக்கை ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ (Digital Detox) என்று அழைக்கிறார்கள். ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்குச் சென்று யோகா மற்றும் தியானம் செய்வதை இந்திய இளைஞர்கள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாற்றியுள்ளனர்.
2. ‘Cool’ கலாச்சாரமாக மாறும் ஆன்மீகம்
முன்பு ஆன்மீகம் என்பது முதியவர்களுக்கானது என்ற பிம்பம் இருந்தது. ஆனால் இன்று அது மாறிவிட்டது. அதிலும் முந்தைய தலைமுறை போல அதிகாரங்களுக்குப் பயந்து எதையும் இவர்கள் ஏற்பதில்லை.
-
கேள்வி கேட்டல்: மதத் தலைவர்களையோ, பாரம்பரிய நம்பிக்கைகளையோ இவர்கள் துணிச்சலாகக் கேள்வி கேட்கிறார்கள். இது எதிர்ப்பல்ல; புரிந்து கொள்ளும் ஆர்வம்.
-
நவீன தத்துவம்: வேதாந்தம், பௌத்தம் அல்லது சூபித்துவம் ஆகியவற்றை மதம் சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல், வாழ்க்கையைத் திட்டமிட உதவும் ஒரு வாழ்க்கை முறையாக (Philosophy) இவர்கள் அணுகுகிறார்கள்.
-
மேற்கில்: தேவாலயங்கள் நவீன இசையையும், இளைஞர்களுக்குப் புரியும் வகையிலான எளிமையான உரையாடல்களையும் முன்னெடுக்கின்றன (Modern Youth Revival).
-
இந்தியாவில்: காசி விஸ்வநாதர் கோயில், கேதார்நாத் மற்றும் ஈஷா யோகா மையம் போன்ற இடங்களுக்குச் செல்வது இந்திய இளைஞர்களிடையே இன்று ‘டிரெண்டிங்’. நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம் அணிவதைத் தாழ்வுணர்ச்சியாகப் பார்க்காமல், தங்கள் அடையாளத்தின் பெருமையாக இவர்கள் கருதுகிறார்கள்.
3. வாழ்க்கையின் அர்த்தம் தேடல் (Existential Quest)
உயர் கல்வி, கைநிறையச் சம்பளம் என அனைத்தும் இருந்தும் ஏற்படும் ஒருவிதமான ‘வெறுமை’ இளைஞர்களை வாட்டுகிறது. அதிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகரித்துள்ள மன அழுத்தம் மற்றும் தனிமைக்கு ஆன்மீகமே சிறந்த மருந்தாக இவர்களுக்குத் தெரிகிறது.
-
சுய பாதுகாப்பு (Self-care): தியானம், மந்திர உச்சாடனம் மற்றும் ஆன்மீக வாசிப்பு ஆகியவை இன்று ‘மென்டல் வெல்னஸ்’ (Mental Wellness) பகுதியாக மாறிவிட்டன.
-
உட்புறக் காயம் ஆற்றுதல்: இது வெறும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல; சமூக ஊடகப் போட்டியிலிருந்து விலகி, தங்களுக்குள் இருக்கும் காயங்களை ஆற்றிக் கொள்ளும் ஒரு வழியாகவும் ஆன்மீகம் பார்க்கப்படுகிறது.
-
ஒப்பீடு: நியூயார்க் இளைஞர்கள் தேவாலயங்களில் ‘வாழ்க்கையின் நோக்கம்’ (Purpose of Life) பற்றித் தேடுகிறார்கள். இந்திய இளைஞர்கள் தங்களின் வேர்களைத் தேடி (Back to Roots) பகவத் கீதை மற்றும் உபநிடதங்களில் உள்ள தத்துவங்களை நவீனக் கண்ணோட்டத்தில் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
4. சமூகப் பிணைப்பு (Community Support)
நவீன நகர வாழ்க்கை மனிதர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது.
-
இந்திய இளைஞர்கள்: ஆன்மீகக் கூட்டங்கள் மற்றும் சத்சங்கங்கள் அவர்களுக்கு ஒரு புதிய நண்பர் வட்டத்தை வழங்குகின்றன. ஒரு பாதுகாப்பான சமூக உணர்வைத் தரும் இடமாக ஆன்மீகக் கூடங்கள் பார்க்கப்படுகின்றன.
5. மன அழுத்த மேலாண்மை
போட்டி நிறைந்த உலகில் ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆன்மீகத்தை ஒரு தீர்வாக இளைஞர்கள் பார்க்கிறார்கள்.
-
நியூயார்க் இளைஞர்களுக்கு ‘பிரார்த்தனை’ தரும் அதே அமைதியை, இந்திய இளைஞர்களுக்கு ‘தியானமும், மந்திர உச்சாடனமும்’ தருகின்றன. ஜுரம் வந்தவன் இளஞ்சூடு தண்ணீரைத் தேடுவது போல, மன உளைச்சலில் உள்ள இளைஞர்கள் ஆன்மீகத்தைத் தேடுகிறார்கள்.
டிஜிட்டல் தர்மம்: இணையமே புதிய ‘சத்சங்கம்’
இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் மூலமே ஆன்மீகம் பரவுகிறது.
-
எல்லைகளற்ற நம்பிக்கை: ஒரு நவீன இந்திய இளைஞர் பகவத் கீதையைப் படிப்பார், அதே சமயம் ஜென் தியானத்தையும் மேற்கொள்வார்; தேவாலயக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார். மதம் சார்ந்த எல்லைகள் இவர்களுக்குத் தடையாக இருப்பதில்லை.
-
உயர் விழுமியங்கள்: அமைதி, அன்பு மற்றும் உண்மைத்தன்மை போன்ற உலகளாவிய விழுமியங்களையே இவர்கள் அதிகம் தேடுகிறார்கள்.
ஆக இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்?
நிபுணர் ஜோஷ் கோட் கூறுவது போல இது ஒரு “யுவ மறுமலர்ச்சி” தான். அறிவியலால் விளக்க முடியாத மன அமைதியை ஆன்மீகத்தால் பெற முடியும் என்பதை ஜென்-இசட் தலைமுறையினர் கண்டறிந்துள்ளனர். இது ஒரு குறுகிய கால மாற்றமல்ல; மாறாக, பொருள்முதல்வாத வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அகப்பயணத்தை நோக்கி இந்தத் தலைமுறை எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான அடி.
துரைசாமி


