டிஜிட்டல் கரன்சி வரப் போகுதுங்கோ: ரிசர்வ் பேங்க அறிவிப்பு!

டிஜிட்டல் கரன்சி வரப் போகுதுங்கோ: ரிசர்வ் பேங்க அறிவிப்பு!

குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், கடந்த பிப்ரவரி 1ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பு நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி (இ–ரூபாய்) அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்காக விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். இது, ‘மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி’ என்று அழைக்கப்படும். சோதனை முறையில் இந்த கரன்சியை அறிமுகம் செய்கிறோம்.

தற்போதைய ரொக்க பணத்துக்கு மாற்றாக இதை கொண்டுவரவில்லை. இரண்டு வடிவிலான கரன்சியும் நீடிக்கும்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், பணம் செலுத்துவதை மிகவும் ஆக்கப்பூர்வமாக மாற்றுதல், சட்டவிரோத பண பரிமாற்றத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படுகிறது.

அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் ‘டிஜிட்டல் கரன்சி–சில்லறை’, குறிப்பிட்ட நிதி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக ‘டிஜிட்டல் கரன்சி–மொத்தவிலை’ என்று 2 வகையான டிஜிட்டல் கரன்சிகள் வெளியிடப்படும்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அவ்வப்போது தகவல்களை வெளியிடும்.

error: Content is protected !!