தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான கொரோனாவுக்கான 2–டிஜி மருந்து அறிமுகம்!

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான கொரோனாவுக்கான 2–டிஜி மருந்து அறிமுகம்!

நாடெங்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை என்ற பெயரில் கன்னாபின்னாவென்று பரவி வருகிறது. அதனைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து இன்று மத்திய அமைச்சர்கள் வெளியிட்டார்கள்.

டிஆர்டிஓ தயாரித்த இந்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ கடந்த 1-ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கும் என சொல்லப்படுகிறது. சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்ஸிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்கிறார்கள் மருத்துவத்துறை சார்ந்தவர்கள். முதற்கட்டமாக 10 ஆயிரம் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டன.

இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும். அதோடு, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமலும் தடுக்கும். இந்த மருந்தை இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!