த பெட் – விமர்சனம்: ஒரு படுக்கை சொன்ன ‘பக்கத்து’ வீட்டு கதை!

த பெட் – விமர்சனம்: ஒரு படுக்கை சொன்ன ‘பக்கத்து’ வீட்டு கதை!

ரு லாட்ஜ் படுக்கை (Bed) பேசினால் எப்படியிருக்கும்? அது எத்தனை முகங்களை, எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்? இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் கதையைத் தொடங்கி, ஊட்டி விடுதியில் நடக்கும் ஒரு ‘கால் கேர்ள்’ மர்மத்தை அவிழ்க்க முயன்றிருக்கிறது இந்த ‘த பெட்’.

கதைக்களம்

ஐடி துறையில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஜாலி நண்பர்கள் பிளாக் பாண்டி, வி.ஜே. பப்பு, விக்ரம் ஆகியோர் ஒரு வீக் எண்ட் ட்ரிப்பிற்காக ஊட்டிக்குச் செல்கிறார்கள். போகும் வழியில் ‘என்ஜாய்’ பண்ண சிருஷ்டி டாங்கேவை உடன் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், சிருஷ்டி மீது ஸ்ரீகாந்துக்கு காதல் மலர, நண்பர்கள் அவரைத் நெருங்க விடாமல் தடுத்துக் காக்கிறார். இந்தச் சூழலில் சிருஷ்டி டாங்கேவும், அடுத்த நாள் நண்பர்களில் ஒருவரும் திடீரென மாயமாகிறார்கள். இவர்கள் எங்கே போனார்கள்? இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே மீதிக்கதை.

யார் எப்படி?

  • சிருஷ்டி டாங்கே: படத்தின் அச்சாணி இவர்தான். கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் ‘கால் கேர்ள்’ கதாபாத்திரத்தில் எந்தத் தயக்கமும் இன்றி நடித்திருக்கிறார். டபுள் மீனிங் வசனங்கள், படுக்கை அறை சல்லாப காட்சிகள் என அசல் கால் கேர்ள் ஆக மாறி மிரட்டியிருக்கிறார்.

  • ஸ்ரீகாந்த்: ஒரு மெச்சூர்டு ஐடி ஊழியராகத் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், காதலிலும் ஸ்கோர் செய்து ‘பாஸ் மார்க்’ வாங்கிவிடுகிறார்.

  • நண்பர்கள் பட்டாளம்: பிளாக் பாண்டி, வி.ஜே. பப்பு ஆகியோர் வழக்கமான ‘சபலி’ இளைஞர்களாக வந்து தங்களுக்குரிய வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

  • பிறர்: மிரட்டல் வில்லன் ஜான் விஜய் இதில் அடக்கி வாசிக்கும் இன்ஸ்பெக்டராகவும், தேவி பிரியா எஸ்.ஐ-யாகவும் வந்து யதார்த்தம் காட்டியிருக்கிறார்கள்.

தொழில்நுட்பம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் தாஜ்நூர், இசையில் தன் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார். கோகுலின் ஒளிப்பதிவு ஊட்டியை இன்னும் அழகாக, வண்ணமயமாகக் காட்டியிருக்கிறது.

பிளஸ் & மைனஸ்

பிளஸ்: ஒரு படுக்கையின் பார்வையில் கதை சொல்லும் விதம் மற்றும் இடைவேளைக்குப் பின் நகரும் சஸ்பென்ஸ் திரைக்கதை. மைனஸ்: கூகுளில் தேடினால் கால் கேர்ள் நம்பர் கிடைப்பது, பாலியல் தொழிலை ஒரு அம்மா தனது மகளுக்குச் சாதாரணமாக அங்கீகரிப்பது போன்ற காட்சிகள் எதார்த்தத்தை மீறிய ‘அதீத ஓவர்’ ரகம்.

பாட்டம் லைன்: காமம், சஸ்பென்ஸ், த்ரில்லர் என மூன்றையும் அளவாகக் கலந்து ஒரு கிக் கதையைச் சொல்ல முயன்றதில் ‘த பெட்’ ஓரளவுக்குக் கவர்கிறது.

மார்க்: 2.75 / 5

Related Posts

error: Content is protected !!