அதெல்லாம் சரி . ஒழுக்கம்-னா என்னங்க?

அதெல்லாம் சரி .  ஒழுக்கம்-னா என்னங்க?
நான் இப்பொழுது வைத்துள்ள ப்ரொஃபைலுக்கு 1.7 லைக்ஸ்..பலர் ஹார்ட்ஸ். அதுல மோசமான கமெண்ட்ஸ் நாலு அல்லது ஐந்து. அதாவது 4/ 1,700 என்ற கணக்கில்தான் மோசமா எண்ணமுள்ள மனிதர்கள் உள்ளனர். அதாவது இந்த பதிவின் படி சமூகத்தில் வன்மத்தை கக்கும், மோச மனிதர்கள் 0.02 %. இது எனக்கான பாசிடிவ் செய்தி. ஆனால் இதையும் குறைக்கனும். பலர் கமெண்ட் போடாமல் அவர்கள் பின்னூட்டம் படித்து மனதில் கறை படியலாம். அதுக்குதான் இப்பதிவு.
பொதுவாய் கே.டி ராகவன் அரசியல் ரீதியாக எனக்கு பிடித்தமானவர் இல்லை. ஆனால் கலாச்சாரம் எல்லாம் பேச்சுதான் ஒன்று சான்ஸ் இல்லை அல்லது பிடித்தமில்லை. தட்ஸ் ஆல். இதில் ஒழுக்கம் எல்லாம் தனி மனிதம் சார்ந்தது. இருவர் மனம் ஒத்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பழகுகிறார்கள் எனில் அவர்கள் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அவரின் துணை யோசிக்க வேண்டிய விஷயம். நம் சமூகத்தில் பாலிகாமி தலைவர்களை ஏற்றுககொண்டு இருக்கிறோம். மனைவியை ஒதுக்கி வாழ்பவரை ஏற்றுக்கொண்டுள்ளோம். இனி இதுப்போன்ற எக்ஸ்ப்ளாயிட்கள் ஹனி டிராப் என்பதை உணர்ந்து அந்த அரசியலை முழுக்க ஒதுக்க வேண்டும்
நம் கலாச்சாரம் ஒன்றும் அப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதை எல்லாம் தாண்டி போய்விட்டது பலர் சிங்கிளாக வாழ்கின்றனர். அவர்கள் டேட்டிங் செய்வது கேர்ள்/ பாய் ப்ரெண்ட் வைத்து கொள்வது அவரவர் விருப்பம். அவர் கேர்ள் ப்ரெண்ட் பேர் தெரியுமா, டேட்டிங் செல்வது தெரியுமா எனில் ..நாம் எக்காலத்தில் வாழ்கிறோம்?
பெங்களுரில் டிண்டர் ஆப் ஆங்காங்கே ஹோர்டிங்க் வைத்து விளம்பர படுத்துகிறார்கள். இங்கு தமிழக ஆண்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸை டிண்டர் ஆப்பாக பயன்படுத்துவது வேறு விஷயம். மேற்கத்திய கலாசாராத்தில் டேட்டிங் போய்தான் கணவன், மனைவியை தேர்ந்து எடுப்பார்கள் நம்மை போல் லூசுக்கூட்டம் இல்லை. ஒரு முறை பார்த்தவுடன் திருமணம் செய்ய. புரிதல் அங்கு அவசியம். இங்கும் டேட்டிங் ஆப் கள் பரவல் ஆவது நல்லது. டிண்டர் ஆப் களை வயதான சிங்கிள் ஆண், பெண்களும் உபயோகிக்க வேண்டும். வெளி நாட்டில் திருமணத்தை நோக்கமாய் கொண்டு செயல்படும் டேட்டிங் ஆப் களும் உண்டு
இன்றைய நிலை பொறுத்தவரை திருமணமான/ ஆகாத ஆண், பெண் பிரேவேசி மேட்டர்களில் தலையிடுவது அதற்காக அவர்கள் அரசியல் வாழ்வை சிதைப்பது எல்லாம் கேவலமானது எனக்கு காயத்திரி ரகுராம் அரசியல் பிடிக்காதுதான். அவரை நாலாந்திர ( கெட்ட வார்த்தை போட்டுக்கொள்ளவும்) போல் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.. யார் ரூமில் யார் இருக்கான்னு விடியோவும் கையுமாக இருப்பதெல்லாம் அரசியல் என்று வந்து விட்டதுதான் மிக மோசம், கேவலம். உண்மையில் காயத்திர மேடத்தை, டெய்சி மேடத்தை பேசியதெல்லாம் சட்டப்படி குற்றம்.
இவர்களின அரசியலே இப்படி எனில் பவர் கிடைத்தால் யார் போனில் யார் என்றே கெட்டு சீரழிவார்கள் நாடுக்கு ஏதும் யோசிக்க முடியாத வன்மமும், ரகசியம் தேடுதலும் சீழ் பிடித்த தலைக்குள் இருக்கும். .இதெல்லாம் கிரிமினல் குற்றங்கள் என்பது தெரியாமல் கூட பெண்களை பேசுகிறார்கள். இதைதான் அரசியல் செய்வது என்கிறார்கள்.
.
உண்மையில் அடுத்தவர் பெட் ரூம் எட்டிப்பார்க்கும் வேலை செய்வதை விட அழகாய் மேல்மட்ட ப்ரொக்கர் வேலை செய்தால் நல்லா சம்பாதிக்கலாம். ஆனால் அதைதான் உள்ளுக்குள்ளும் அரசியலாக செய்கிறார்களோ என்னவோ. எண்ணம்தானே பேச்சு, செயல்.. இதற்கு எல்லாம் ஒரே பதில்தாம் சமூகம் தர வேண்டும்.
அது ஒன்றுதான். “நீ முட்டாள், மூளைக்கெட்டவன் யாரை என்ன வேணா பேசுவன்னு” தூசி போல் தட்டி  விடணும். இது போன்ற கெட்ட எண்ணம் உள்ளவர்களை அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுக்கி தள்ளனும். பெண்கள் இதை செய்யனும். தலைவராக நடக்க கூட தகுதியற்றவர்கள். காயத்திரி மேடத்துக்கு நடந்தது நாளை நிர்மலா மேடம், தமிழிசை மேடம்க்கு எல்லாம் இது நடக்காதுன்னு என்ன நிச்சயம்? இதில் தமிழக கட்சியானாலும் நம் நிலைபாடு மாறக்கூடாது. இவர்களை #₹%& லிஸ்டில் வைக்க வேண்டும்.
பெண்களை எக்ஸ்ப்ளாயிட் செய்வது கூட மன்னிக்கலாம் பெண்களை வைத்து அல்லது அது பற்றி பேசி அவர்களை எக்ஸ்ப்ளாயிட் செய்து அவர்கள் உழைப்பை, அரசியல் வாழ்வை அழிக்க நினைப்பது மிக தவறு. அது பெண்களுக்கும் இழைக்கும் துரோகம். இதற்கே அரசியலில் பெண்கள் பயன்படுவார்கள் என்பது நமக்கும் இழுக்குதான். பெண்களை ( அது அசிங்கமெல்லாம் இல்லை, இயற்கை விருப்பம்/ தேர்வு) அசிங்கமாய் பேசுவது சட்டபடி குற்றம்.
அதெல்லாம் சரி . இவர்களுக்கு ஒரு கேள்வி.
ஒழுக்கம்னா என்னங்க?
error: Content is protected !!