CBSE 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகளின் அட்டவணை வரப் போகுது!

CBSE 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகளின் அட்டவணை வரப் போகுது!

சிபிஎஸ்இ (CBSE) 10,12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளன. பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions வினாத்தாளில் இருக்கும் என்று மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வியாழக்கிழமை (அக்டோபர் 14, 2021) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. வெளியிடப்பட்டவுடன், மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in இல் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

“10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படும்; அக்டோபர் 18 ஆம் தேதி இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். 10, 12 ஆம் வகுப்புகளுக்கான டர்ம் -1 பொதுத் தேர்வுகள் 90 நிமிட அவகாசம் கொண்ட  அப்ஜெக்டிவ் வகை தேர்வாக இருக்கும்” என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

error: Content is protected !!