எஜூகேசன் லோன் வாங்கறதிலே நம்ம தமிழ்நாடுதான் டாப்! – ஏன் தெரியுமா?

எஜூகேசன் லோன் வாங்கறதிலே நம்ம தமிழ்நாடுதான் டாப்! – ஏன் தெரியுமா?

உயர்கல்வி தனியார் மயமான பிறகு, கிராமப்புற, ஏழை, அடித்தட்டுக் குடும்பத்து மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிப் போனார்கள். +2 முடித்தவர்களில் சொற்ப மாணவர்களே உயர்கல்வியைத் தொட்டார்கள். இன்று, மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்கள் இந்த நிலையை ஓரள வுக்கு மாற்றியிருக்கிறது.குறிப்பாக, கல்விக்கடன் திட்டம். இன்றைக்கும் பெரும் பாலான வங்கி மேலாளர்கள் கடன் கொடுக்காமல் இழுத்தடிப் பதும், அலையவிடுவதும் நடக்கிறதுதான். ஆனால், இந்திய அளவில் அதிக கல்விக்கடன் பெற்றவர்களில் கேரளாவும் நாமும்தான் முன்னே நிற்கிறோம். அந்த வகையில் பிற மாநிலங் களோடு ஒப்பிடும்போது, அத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

edu sep 27

வெளிநாட்டில் படிக்க, 20 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கிறது. இந்திய வங்கிகள் அசோசியேஷன் கல்விக் கடனுக்கு ஏராளமான சலுகைகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி பல மாணவர்கள் கல்விக் கடன் பெற்று வெளிநாடு சென்று படிக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ,மூலம் கல்விக்காக 2013 முதல் 2016 வரை 25736 கோடி ரூபாய் கடன் வழங்கபட்டு உள்ளது. 21,79 லட்சம் பேர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்த கடன்கள் 92% பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகள் மூலம் ரூ 2009 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 2.36 லட்சம் பேர் கல்விக் கடன்கள் பெற்றுள்ளனர் . இந்த வங்கிகள் கொடுத்த மொத்த கடன் தொகையில் 21% தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட கல்விக் கடன் தொகை அதிகரித்து வரும் வேலையில் பயனாளர்களின் எண்ணிக்கையை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2014ல் 7060 கோடியாக இருந்த தொகை 2016ல் 9049 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் பயனாளிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் கடந்த ஆண்டை விட குறைத்து உள்ளனர். அதே நேரத்தில் தனியார் வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளனர். இதன் பின்னணியில் பொறியியல் கல்லுரிகளின் சேர்க்கை முக்கிய பங்குவகிக்கிறது . இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்காக மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களில் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியுள்ளன. , ஏறத்தாழ 44 சதவீத இடங்களே மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் கடன்களுக்கான விதிமுறைகளை பொது துறை வங்கிகள் கடினம் ஆக்கி விட்டதும் பயனாளர்கள் குறைவதுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனாலும் பொதுத்துறை வங்கிகள் 2013முதல் 2016 வரை இந்தியா முழுவதும் கொடுத்துள்ள கல்விக் கடன்களில் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மொத்த கடன் தொகையில் 20.8% தமிழ்நாட்டில் வழங்கப் பட்டுள்ளது. இதே போல் தனியார் வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையில் 24.8% பெறப்பட்டு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் உள்ளது .தமிழகத்தில் கல்வி கடன் அதிகம் வாங்கப்படுவதற்கு கல்லூரிகளின் கட்டணம் தான் காரணம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண ஒழுங்குமுறை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் குழு தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிக்கிறது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் இந்தப் பரிந்துரைகள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன.

குறிப்பாக இந்தியா முழுவதும், ரூ 61831 கோடி கல்வி கடன் நிலுவை தொகையாக உள்ளது , இதிலும் தமிழ்நாடுமுதல் இடத்தில் உள்ளது. ரூ 15297 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது. அடுத்த இடத்தில் கேரளா ரூ 8385 கோடி . தமிழகத்தில் பெருகியுள்ள பொறியியல் கல்லுரிகளுக்கு ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளே மாணவர்களுக்கு வங்கிகளிடம் கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். நான்கிலிருந்து ஐந்து லட்சங்கள் வரை கடனாகப் பெறும் மாணவர் ஒருவர், அதை ஐந்தாண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்த மாதத் தவணையாக சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்களைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொறியியல் படித்த அனைவருக்கும் படித்தவுடன் வேலை கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சென்னை பெங்களூரு போன்ற வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கே கிடைக்கின்றன.

இந்நிலையில் திரும்பி வராது என கணக்கிட்டுள்ள சுமார் 875 கோடி மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத மதிப்பிலான விலைக்கு (55 சதவீத தள்ளுபடியில்) கைமாற்றி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

இதனிடையே

மத்திய அரசு – கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது?

2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-
https://canarabankcsis.in/SubsidyEnquiry/SubsidyEnquiry.aspx
2009 முன் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள :-
https://canarabankcsis.in/CSIS_Old_Data…/SubsidyEnquiry.aspx

#கல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-
http://www.iba.org.in/HRD.asp
http://www.iba.org.in/circularnew.asp

Related Posts

error: Content is protected !!