தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) தூத்துக்குடி மாவட்டத்தில் DGM, AGM, பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும்..எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப்பார்த்துக் கொண்டு, வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்..!
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர்
எண்ணிக்கை
பொது மேலாளர் (IT)
பல்வேறு
துணை பொது மேலாளர் (IT)
பல்வேறு
உதவி பொது மேலாளர் (IT)
பல்வேறு
தேவையான கல்வித்தகுதி
பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் BE/B.Tech அல்லது MCA இல் 15 வருட அனுபவம் இருக்கவேண்டும்.
துணை பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 10 வருட அனுபவத்துடன் CS/IT அல்லது MCA இல் ME/M.Tech
உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் எட்டு வருட அனுபவம், CISA/CISSP/CISM சான்றிதழ் மற்றும் BE/B.Tech/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 45 வயது 55 வரை இருக்கவேண்டும்.
துணை பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 45 வயது 55 வரை இருக்கவேண்டும்.
உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 38 வயது 45 இருக்கவேண்டும்.
சம்பள விவரம்
பதவியின் பெயர்
சம்பளம்
பொது மேலாளர் (IT)
ரூ.40,000
துணை பொது மேலாளர் (IT)
ரூ.40,000
உதவி பொது மேலாளர் (IT)
ரூ.40,000
விண்ணப்ப விவரங்கள்
மேற்கண்ட இந்த பணிகளில் வேலைக்குச் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ளமுடியும்.
விண்ணப்பம் செய்ய எந்த கட்டணமும் செலுத்தப்படவேண்டாம்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான TMB என்ற இணையத்திற்குச் சென்று இந்த வேலை சம்பந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
க்ளிக் செய்த பிறகு தேவையான ஆவணங்களை வைத்து வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பவேண்டும்.
நிரப்பிய பிறகு நீங்கள் நிரப்பியது அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதைப் பார்த்துவிட்டுச் சமர்ப்பி என்பதை க்ளிக் செய்யவேண்டும்.
வேலைசெய்யும் இடம்
தூத்துக்குடி
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணிகளில் வேலையில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.