இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!

த்திய புள்ளி விவரங்கள் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2020-21ம் நிதியாண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக 38,837 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில், 15.7 சதவீத தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக 28,479 தொழிற்சாலைகளுடன், குஜராத் மாநிலம் 11.5 சதவீதத்துடன் 2 வது இடத்தில் இருக்கிறது.

10.3 சதவீதத்துடன் 25,610 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம், மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் 8 சதவீதத்துடன் 16,924 தொழிற்சாலைகளும் 4 வது இடத்திலும், உத்தர பிரதேசத்தில் 16,184 தொழிற்சாலைகளுடன்6.5 சதவீதத்துடன் 5 வது இடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், மாநிலத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!