தமிழக அரசின் இரண்டாண்டு சா(வே)தனைகள்!

தமிழக அரசின் இரண்டாண்டு சா(வே)தனைகள்!

திமுக அரசின் வெற்றிக்கு காரணம் எடப்பாடியின் பிடிவாதம், விலைபோன மக்கள், சுடலை மீது மக்கள் கொண்டிருந்து ஒரு வகை பரிதாப உணர்வுதான். இன்று அந்த பரிதாபத்திற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள் என்றால் மிகையில்லை, அனுபவிக்கட்டும்! இந்த அரசின் அமைப்பு சில நேர்மையான அதிகாரிகளை தலைமை செயலராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நியமித்தபோ , புருவத்தை உயர்த்தியது, தப்ஸ் திருந்திட்டானோ? நாமதான் அப்பனைப்போல தப்பா நெனச்சிட்டோமா என்ற நம்ம குழப்பம் விலக அதிக நாட்கள் ஆகவில்லை.

ஆனால் இந்த அரசிற்கு ஆரம்பமே கொரானாவின் பரவல் மிக வேகமாக பரவியது. அது புதியதாக பொறுப்பேற்கும் எந்த அரசிற்கும் கடும் சிரமத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த பரவலுக்கே இவர்கள்தான் முக்கிய காரணம் என்பதால், அது அவர்களுக்கு தேவையான ஒன்றுதான். ஆம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இவர்க எதிர்கட்சியாக இருந்த மக்களை பயமுறுத்தி தடுப்பூசி போட விடாமல், செய்ததிற்கு, அவர்களே அனுபவித்தார்கள். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவர்கள் மக்களுக்கு முன்பு சொன்னதுபோல கட்டுப்பாடுகளை விதிக்க முடியாதபோது, அதனால் பரவல் அதிகமானது. அதை உடனே கட்டுப்படுத்த ரம்ஜான் வந்ததால், அதற்காக தாமதித்தது இரண்டாவது தவறு. அதனால் பரவல் மிக வேகமாகி, மக்கள் பெரும். துன்பத்திற்கு ஆளானர்கள். பலர் இறந்ததிற்கு அவர்கள் ஆளுமையில் இருந்த குழப்பம், வழக்கம்போல போலீஸ்காரர்களை மதிக்காத திமுக கட்சிக்காரன் என்று எல்லா குளறுபடிகளும் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க காரணம் ஆகியது. ஆனால் தங்களிடம் இருந்த மீடியா செல்வாக்கை பயன்படுத்தி, அதை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பாராட்ட வேண்டிய விஷயம். அதற்குள் கொரானாவின்போது அதிமுக அரசு எதை செய்யக்கூடாது என்று சொன்னதோ, எல்லாவற்றையும் U Turn போட்டு செய்தது. அது தடுப்பூசி விஷயம் ஆகட்டும், கட்டுப்பாடுகள் ஆகட்டும் எல்லாமே மாறியது. அதற்கு கொடுத்த விலைகள் பல உயிர்கள். அந்த U Turn களை மறைக்க தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று அசிங்க அரசியலை முன்னெடுத்து மறைத்தது. முடிவாக மத்திய அரசின் தடுப்பூசியாலும், அது Online Registration Process என கொண்டுவந்த திட்டங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்ள அதன் மீடியா அரசுக்கு உதவியது.

பொதுவாக திமுகவின் சாபக்கேடு என்றால் சட்டம் ஒழுங்கு. அதன் ரவுடி கட்சிக்காரர்களை கட்டுப்பாட்டில் வைத்தால், அவர்கள் செல்லும் தூரம் பாதியாகிவிடும். ஆனால் வழக்கம்போல அதை செய்ய முயற்சிக்கக்கூட இல்லை. அதனால் மீண்டும் 2006-11 என்ற ஒரு கேவலமான ஒரு காட்டாட்சி வந்துவிடுமோ என்ற பயம் பலரிடம் இருந்தது. ஆனால் மத்திய அரசு பற்றிய பயத்தாலும், சோஷியல் மீடியாவாலும் அந்த அளவிற்கு போகவில்லை. அதற்காக இந்த அரசை பாராட்ட முடியாது. அந்த சூழலில் முதல்வரிடம் எந்த சரக்கும் இல்லாத பொம்மை என்ற விஷயம் அடுத்தடுத்து பரவ, அதிகாரிகளின் லஞ்ச லாவண்ய ஆட்டம் தொடங்கியது. ஆனால் விரைவாக குடும்பம் அந்த அதிகாரிகளிடம் நேரிடையான புரிதல் மூலம், சுடலை எதிர்கட்சியாக மூச்சுக்கு மூச்சு சொல்லப்பட்ட கமிஷன், கரப்ஷன் என நேரடி பங்குராரர்கள் ஆனார்கள். கூட்டு களவானிகள் ஆனபின்பு அவனிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியுமா? எல்லாவற்றிற்கும் ஓபனாகவே ரேட் போட்டார்கள்.

மோடி அரசு கொண்டுவந்த Online and Computerized திட்டங்களின் Dashboard Report மூலம் எத்தனை Registration நடக்கிறது என்று பார்த்து, அதை இவர்கள் ஊழல் செய்ய பயன்படுத்தினார்கள். ஆம் RTO ஒன்றுக்கு 25 லட்சமாக இருந்த தொகையை, 2 கோடியாக உயர்த்தினார்கள். அதனால் எதிர்பார்த்த துட்டுக்கு மேல் கள்ளாக்கட்டியது. அந்த ஃபார்முலாவை கொடுத்த அணில், கோல்மால்புரத்தின் ஆஸ்தான நம்பிக்கையை பெற்றார். அது ஒருபுறம் வசூலுக்கு உதவினாலும், மறுபுறம் அடுத்த கட்ட தலைவர்களின் கோபத்தை கிளறியது. ஆனால் எதுவும் செய்ய முடியாத சூழலில் வருகிற கமிஷன், கரப்ஷந்தான் ஆட்சியின் மிஷன், விஷன் ஆனது. இது நாம் எதிர்பார்த்த திமுக என்பதை மீண்டும் நிரூபித்தது. ஆனால் எதிர்கட்சியான அதிமுகவிற்கு போக வேண்டிய கமிஷனை சரியாக கொடுத்ததால், அவர்களும் அடக்கி வாசித்தார்கள். அவர்கள் பிரச்சினை செய்துவிடாமல இருக்க சில வழக்குகளை போட்டு உன் குடுமி என் கையில் என்று சமிஞை செய்தார்கள்.

வழக்கம்போல மீடியா தம் கையில் இருந்ததால், விஷயம் வெளிவராமல் பார்த்துக்கொண்டது. வழக்கம்போல மத்திய அரசின் திட்சங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பாரி வள்ளல் ஆனார் சுடலை. ஆபீஸில் ஃபைல் பார்க்க நேரமில்லை என்பதை உணர்த்த, தலைவர் பயணத்தின் போதுகூட மோடி போல ஃபைல்களை பார்ப்பதுபோல ப்ரொஜெடக்ட் செய்தார்கள். ஆனால் இவருக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தலைகீழாக படிப்பதாக நடித்தபோது மக்களுக்கு பு(தெ)ரிந்தது.

மின்சார கட்டணத்தை கூட உயர்த்துவதற்கு எதிர்த்த இந்து கரகாகட்ட கும்பல், அதே மின்சாரம் முதல் வீட்டுவரிவரை அளவுக்கு அதிகமாக.உயர்த்தியும், 2.5 லடாம் கடன் வாங்கியும், கொரானா காலத்தில் உயிரை கொடுத்து வேலை பார்த்தவர்களுக் வேலை நிரந்தரம் செய்வதாக கூறிய கோமாளி அவர்களை வீட்டுக்கு நிரந்தரமாக அனுப்பி, ஒத்துழைக்காத அதிகாரிகளை கொலை செய்து, நிரந்தரம் ஓய்வூதியம் என்பதற்கு அல்வா கொடுத்து, கொடுக்க வேண்டிய காசைக்கூட PF ல் செலுத்தாதல்துதான் இந்த அரசு செய்த சாதனை.

திடீர், திடீரென அலுவலகங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக விசிட் செய்தபோது, அங்கே அவர் வருவதற்காக அலங்காரம் செய்து வைத்திருந்தது இவருக்குத்தான் சர்ப்ரைஸ் கொடுத்தது. ரோட்டு கடைகளில் டீ சாப்பிட்டார், ஏழை வீடுகளுக்கு சென்று உணவருந்தினார், சைக்கிள் ஓட்டினார், உடற்பயிற்சி செய்தார் ஆனால் இந்த அரசில் என்ன நடக்கிறது என்பது மட்டும் அவருக்கு தெரியாது!

பொதுவாகவே சில திட்டங்களை அதிமுகவால் கொண்டுவர முடியாது. அதற்கு இவர்களின் மீடியா, போராட்டக்குழு என்று பலமாக இருந்ததால் அதை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் எப்பேர்பட்ட சிஸ்டமாக இருந்தாலும், அதில் காசும், கமிஷனும் வருகிறது என்றால் இவர்கள் அதை செய்துவிடுவார்கள். அதில் சேலம் எட்டுவழிச்சாலை, சென்னை துறைமுகம் செல்ல Flyover என்பது போன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது இவர்கள் செய்த நல்ல விஷயம். இன்னும் சொல்லப் போனால் 12 மணி நேர வேலை, தானியங்கி மது விற்பனை என்பதெல்லாம் சரியான திட்டங்களே. ஆனால் அதை இவரால் செய்ய முடியவில்லை.

அப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்த அவருக்கு அண்ணாமலை வந்தது மிகப்பெரிய பிரச்சினை. அவர் வந்தபின் எல்லாம் U Turn அரசாக காலையில் திட்டங்க்ளை அறிவிப்பதும், மாலையில் விளக்குவதும் என்று மாறிப்போனது. எதிர்கட்சியான அதிமுக உற்கட்சி பூசலில் கோமாவில் இருக்க, இவர்கள் கொள்ளைக்கு தடங்கள் இல்லாமல் போனது, அண்ணாமலையால் பிரசினை ஆனது. அதுவரை ஒட்டிவந்த ஸ்டிக்கர் எல்லாம் வெளிவந்தது. அரசு ஊசல் ஆடியது.

அந்த சூ(ஊ)ழலில் அண்ணாமலைக்கு மக்கள் ரெஸ்பான்ஸ் அதிகரிக்க, இவரின் ஆட்சி ஆட்டம்கண்டது. இவர் ஒரு டம்மி பீஸ் என்றும், ஆட்சி செய்வது கிட்சன் கேபினெட் என்பதை ஆணித்தரமாக அவர் தோலுரிக்க, இவருக்கு தூக்கம் போனது. இனிமேல் மீண்டும் ஒரு ஆட்சி திமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் மிக குறைவு என்பதை உணர்ந்த குடும்பம், ஊழலால் ஒரு பக்கம் வாரி குவிக்க, மறுபக்கம் 2006-11 ஆட்சியில் சம்பாதித்த சொத்துக்கள் பினாமியிலல்ல் இருக்க, அது ஆட்சி போனால் கைவிட்டுப்போய்விடும் என்று அதை தங்கள் வடப்படுத்த நிறுவனத்தை தொடங்கி தன் வசப்படுத்துகிறார்கள்.

அதிமுகவை உடைத்து விட்டதால் திமுகவிற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பெரிய வெற்றி கிடைக்கும். அதன் மூலம் அடுத்த ஆட்சியும் நமது ஆட்சியே என்று கூட இருந்த அல்லக்கைகள் உளறலை கேட்டு நம்மை யாரும் அசைக்க முடியாது என்று சந்தோஷப்பட்ட சுடலை, முதல்வரிலிருந்து பிரதமர் கனவாக மாறியது. ஆனால் இப்போது நடக்கும் மதம் முதல்வர் பதவியே கனவுபோல நடக்கிறது என்பதை உணரவில்லைம் அதனால் மத்திய அரசு தமது அரசை கண்டு பயப்படுகிறது என்று நம்பினார்.

ஆனால் அண்ணாமலையின் ஒவ்வொரு எதிர்ப்பும் மக்கள் ஆதரவாக மாற, மறுபக்கம் தலைவலியாக மாறியது. இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெயலலிதா போல கூண்டுக்கிளியாக வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்தார். அதெற்கெல்லாம் மொத்தமாக ஊழல் புகாரை அண்னாமலை வஜ்ராயுதமாக திட்டமிட்டபடி தாக்க, ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் இருந்து எழுந்தவர் இப்போது எங்கே இருக்கிறோம், என்ன செய்வது என்று தெரியாததுபோல குழப்பத்தில் இருக்கிறார். இந்த சூழலில் இவர் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம் என்ற பயத்தில் குடும்பம் வேகமாக தங்கள் பினாமி சொத்துக்களை தம்வசப்படுத்த அவசரப்பட, செய்த தவறுகள் அவர்களை காட்டிக்கொடுத்தது. அதன் விளைவாக இன்று ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகளை சந்திக்கிறது, சந்தி சிரிக்கிறது. எந்த வழக்குகளும் இவர்களை தண்டிக்க வாய்ப்புகள் மிக குறைவு, ஆனால் அதை வைத்தே இந்த அரசை பாஜக வீழ்த்திவிடும்.

இந்த அரசின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது. 40 வருடங்களில் வாங்கிய கடன் 5.5 லட்சம் கோடியாக இருந்தது இப்போது 7.5 லட்சம் கோடியாக மாறிவிட்டது. நிதி நிலை மோசமான நிலையில் டாஸ்மாக மூலம் அரசு தள்ளாடி நடக்க, ஓட்டுப்போட்ட மக்கள் போதையில் தள்ளாடுகறார்கள். திமுகவின் கடைசி ஆட்சி என்பதை அந்த குடும்பம் நன்கு உணர்ந்த நிலையில் பகல் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டார்கள்.

இந்த அரசு எந்த உருப்படியான பெரிய செயல்களை செய்ததில்லை. செய்தவற்றை கூட முடிக்கவில்லை. யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் ஒரு ஆ(கா)ட்சி நடக்கிறது. NDA கூட்ட்ணி உறுதியான நிலையில், அது மிகப்பெரிய தோல்வியை 2024 தேர்தலில் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. அநேகமாக இளவரசர் விரைவில் முதல்வர் ஆவார். அப்படி நடந்தாலும், நடக்காவிட்டலும் திமுக ஆட்சி கலைக்கப்படும், அல்லது இவர்கள் கைவிட்டுப்போகும். டெத்பெட்டில் திமுக!

ஸ்டாலினின் பல U Turn களுக்கு பின்னால் இந்த அரசு எந்த திசையில் செல்கிறது என்று அவர்களுக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை. திமுக அரசை அழிக்க அதை ஆள விடுங்கள், அழிந்து விடுவார்கள் என்பது நாம் திரும்ப திரும்ப சொல்லும் பரம ரகசியம். அதை கனகச்சிதமாக செய்கிறார்கள்.

ஈராண்டு சாதனையல்ல, இதை புரிந்துகொள்ளாத முட்டுக்கொடுக்கும் அடிமைகள் வேதனை, மக்களுக்கு சோதனை, எதோ சில காலத்திற்கு கொடுக்கலாம் போதனை!

மரு. தெய்வசிகாமணி

Related Posts

error: Content is protected !!