ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! அவர்கள் கோரிக்கை என்ன? – முழு விபரம்!

ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! அவர்கள் கோரிக்கை என்ன? – முழு விபரம்!

ம் நாட்டில் ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) ஆகிய மூன்று ஆன்லைன் ஃபுட் ஆர்டர் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருப்பதால், இந்த நிறுவனங்களிலேயே அதிக ஆர்டர்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஸ்விகியில் மட்டும் ஒரு நாளைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற வேண்டும் எனவும் ஏற்கனவே வழங்கிவந்த ‘டர்ன் ஒவர்’ தொகையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தற்போது, இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வயதானவர்கள், உணவு தேவையை எதிர்பார்த்திருப்போர் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்து உள்ளோம். கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை நிர்வாகத்திற்கு அளித்துள்ளோம். இதுவரை பேச்சு வார்த்தைகளோ அல்லது கோரிக்கை மீது தீர்வு காண முற்படவில்லை. இதனால் வேறு வழியின்றி இன்று மே 22ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த வேலை நிறுத்தத்தில் ஸ்விகி நிறுவனத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் பணிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்விகி ஊழியர்களின் கோரிக்கைகள் இதோ:

error: Content is protected !!