’ஸ்வீட் ஹார்ட்’ – விமர்சனம்!

’ஸ்வீட் ஹார்ட்’ – விமர்சனம்!

இன்றைய காலகட்ட இளம் தலைமுறையினரின் காதல் அர்த்தமற்றதா அல்லது அர்த்தமுள்ளதா என்பது என்பது ஒவ்வொரு நபரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. ஆனால், காதல் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு பகுதி என்பதை அழுத்தமாகச் சொல்லும் படமே ‘ஸ்வீட் ஹார்ட்’.ஆனால் காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார். நாயகன், நாயகி இடையிலான காதல் கெமிஸ்ட்ரி தான் படத்தின் முக்கிய அம்சம் என்றாலும், அது படத்தில் எடுபடாமல் போனது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.காதலன், காதலி இடையிலான பிரிவுவையும், அதன் வலியையும் சொல்ல வரும் கதையை, கருக்கலைப்புக்கு முக்கியத்துவம் தரும்படியான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் தடம் மாறச்செய்வதுடன், படத்துடன் ரசிகர்களை ஒட்டவிடாமல் செய்து விடுகிறது.

சின்ன வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், நாயகன் ரியோ ராஜ் திருமணம் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில் நம்பிக்கை இல்லை. அதே சமயம் , அவரது காதலி கோபி ரமேஷ் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்கிறார்கள். பிரிந்த பிறகு, கோபி ரமேஷ் கர்ப்பமாக இருப்பதை ரியோ ராஜ் கண்டுபிடித்து, கருவை கலைக்கச் சொல்கிறார். ஆனால் ரியோ ராஜுன் குழந்தையை பெற்று வாழ விரும்கிறார் கோபிகா ரமேஷ். இந்த முரண்போக்கு எங்கு போய் முடிகிறது என்பதை சென்டிமெண்ட் டச் உடன் சொல்ல முயன்றிருப்பதே ஸ்வீட் ஹார்ட் படக் கதை.

லவ்வர் பாயாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் ரியோ ராஜ் காதலியின் பிரியம், ஆசையைப் புரிந்துகொள்ளாமல் சீறுவது, தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், கெத்து, ரொமான்ஸ் என்ற வழக்கமான ஃபார்முலாவுடன், உறவுகள் என்றாலே விரக்தி, காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறும் இடம் என பல இடங்களில் பாஸ் மார்க் மார்க் வாங்கி விடுகிறார்.ஆனால் காதலியுடனான கெமிஸ்ட்ரி எடுபடாமல் போவதால் ரியோ ராஜும் எடுபடாமல் போகிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், தனக்கென்று தனி விருப்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு சூழல்களை எதிர்கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் பாலாஜி சுப்ரமணியம், நாயகன், நாயகிக்கு அதிகமான க்ளோசப்-களை வைத்திருக்கிறார். அந்த வகையில்நாயகன் ரியோ ராஜுக்கு தேவையில்லாத குளோசப்-களை வைத்து அவரை குறையாக காட்டியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

சாதாரண திரைக்கதை மற்றும் காட்சியமைப்பாக இருந்தாலும், அதை ரசிகர்களிடம் வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்கான நான்லீனர் முறையை கையில் எடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன், ரசிகர்கள் குழப்பமடையாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் ஜூனியர் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடலில் மட்டும் அவரின் ‘வைப்’பை ஓரளவிற்கு ஃபீல் பண்ண முடிகிறது. மேலும் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் அவரின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் சம்பவம் நடந்த பிறகு காதலியின் கர்ப்பத்தை கலைக்க ரியோ, டாக்டரிடம் அலையும் காட்சி தொடங்கி அதுவே முக்கால்வாசி படத்தை விழுங்கி விடுகிறது.ரியோ ராஜ் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. அது உறுத்தலாக இருந்தாலும் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளும் விதமாகவே உள்ளது.

ஆனால் கதைக்கரு போதிய ஆழமில்லாமல் இருப்பதாலும், இரண்டாம் பாதியிலும் பிரதான கதாபாத்திரங்கள் விரிவடையாமல் போனதாலும், அவர்களின் பிரச்னைகளும், அவை தொடர்பான காட்சிகளும் ரிப்பீட் அடிப்பதாலும் தலைப்பு கவர்ந்த அளவு படம் இனிக்கவில்லை!

மார்க் 2/5

error: Content is protected !!