“கூகுள் தேடல் சிறப்பாக/விரைவாக செய்ய சூப்பர் டிப்ஸ்!”

“கூகுள் தேடல் சிறப்பாக/விரைவாக செய்ய சூப்பர் டிப்ஸ்!”

ன்றைய டிஜிட்டல் உலகில் தகவலைக் கண்டுபிடிப்பதற்கான முதல் விருப்பம் கூகுள் தேடல் (Google Search).இணையத்தில் ஒரு வினாடியில் பல்லாயிரக்கணக்கான தகவல்களை வழங்கும் கூகுள்,அறிவுக்கான கதவாகவும், ஆய்வுகளுக்கான கருவியாகவும் மாற்றி விட்டது. இந்த கூகுள் சர்ச் எனப்படும் தேடல் தகவல்களை அணுகும் முறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம் போன்ற அனைத்து துறைகளிலும் முக்கிய கருவியாக உள்ளது.அந்த வகையில் “Google hacks for better results” என்றால், கூகுள் தேடலில் மிகவும் துல்லியமான மற்றும் பயனுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு சில சிறப்பு தந்திரங்கள் அல்லது குறிப்புகளைப் பயன்படுத்துவது ஆகும். இவை உங்கள் தேடலை விரைவாகவும் திறமையாகவும் செய்ய உதவும். இதன் யூஸ் என்னவென்றால், நீங்கள் தேடும் தகவலை சரியாகவும், தேவையற்ற முடிவுகளைத் தவிர்த்து, குறைந்த நேரத்தில் பெற முடியும். குறிப்பாக ஆராய்ச்சி, படிப்பு, அல்லது தினசரி தேவைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சில பிரபலமான Google hacks மற்றும் அவற்றின் பயன்கள் (உதாரணங்களுடன்):

Quotation Marks (” “)

பயன்: ஒரு சரியான சொற்றொடரைத் தேட வேண்டுமா? அதை quotation marks-ல் போடுங்கள்.

உதாரணம்: “Tamil Nadu culture” என்று தேடினால், இந்த சரியான சொற்றொடர் உள்ள முடிவுகள் மட்டுமே வரும்.

Minus Sign (-)

பயன்: தேவையற்ற வார்த்தைகளை விலக்க உதவும்.

உதாரணம்: recipes -nonveg என்று தேடினால், சைவ உணவு ரெசிபிகள் மட்டும் கிடைக்கும்.

Filetype:

பயன்: குறிப்பிட்ட வகை கோப்புகளை (PDF, PPT போன்றவை) தேடலாம்.

உதாரணம்: filetype:pdf Tamil history என்று தேடினால், தமிழ் வரலாறு பற்றிய PDF கோப்புகள் கிடைக்கும்.

Site:

பயன்: ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தில் மட்டும் தேடலாம்.

உதாரணம்: site:bbc.com India news என்றால், BBC வலைத்தளத்தில் இந்திய செய்திகள் மட்டும் வரும்.

Asterisk (*)

பயன்: மறந்துபோன வார்த்தைகளை கூகுள் நிரப்பும்.

உதாரணம்: “Tamil * festival” என்று தேடினால், “Tamil Nadu festival” அல்லது “Tamil Pongal festival” போன்ற முடிவுகள் வரும்.

Two Periods (..)

பயன்: ஒரு குறிப்பிட்ட எண்கள் அல்லது ஆண்டு வரம்பில் தேடலாம்.

உதாரணம்: Tamil movies 2010..2020 என்றால், 2010 முதல் 2020 வரையிலான தமிழ் திரைப்படங்கள் பற்றிய முடிவுகள் வரும்.

OR

பயன்: இரண்டு வெவ்வேறு விஷயங்களை ஒரே தேடலில் பார்க்கலாம்.

உதாரணம்: Tamil music OR Tamil dance என்றால், தமிழ் இசை அல்லது நடனம் பற்றிய முடிவுகள் வரும்.

இதன்  ஒட்டு மொத்த பயன்கள்:

நேரத்தை மிச்சப்படுத்தும்: தேவையற்ற முடிவுகளைத் தவிர்த்து சரியான தகவலை விரைவாகக் கண்டுபிடிக்கலாம்.

துல்லியமான முடிவுகள்: உங்களுக்கு தேவையானதை மட்டும் பெற முடியும்.

படிப்பு/ஆராய்ச்சிக்கு உதவி: மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது.

எளிமையான தேடல்: சிக்கலான தேடல்களை எளிதாக்குகிறது.

இந்த hacks-ஐ பயன்படுத்தி பாருங்கள், உங்கள் Google தேடல் அனுபவம் மேம்படும்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!