இலங்கையில் எரிபொருள், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்!
இலங்கையில் எரிபொருள், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்ந்து ரூ.2,657க்கு விற்பனை ஆகிறது. அதே போல ஒரு லிட்டர் பால் ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இலங்கையில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொழும்பில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் பேரணி நடந்தது. இலங்கை அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி அவர்கள் போராட்டம் நடத்தினர். அரிசி, சர்க்கரை, பால், எரிபொருள், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து அவர்கள் குரல் எழுப்பினர்.