மனித ஊழலைக் கண்டுபிடிக்கும் ரோபோக்கள்!
மனிதன் செய்யும் வேலைகளை மனிதனை விட மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் செய்பவை ரோபோக்கள் ஆகும். அந்தவகையில், பெரும்பான்மையான துறைகளிலும், மனிதர்களை விட வேகமாகவும், அதி விரைவாகவும் வேலையைச் செய்து முடிக்க, ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு, மனிதர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கவும், ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம், ஸ்பெயினின் வல்லா போலித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். நாம் சந்தேகப்படும் தொழில் அல்லது திட்டம் குறித்து இந்த ரோபோவிடம் தகவல் கொடுத்தால், அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையா? என்பதை இது கண்டறியும்.
அதே சமயம் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள், இந்த ரோபோவில் சேமிக்கப்பட்டுள்ளது. அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதே போன்று குறிப்பிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்தக் கட்சியின் செயல்பாடு, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோ சரிபார்க்கும். இதன்மூலம் ஊழல் கண்டுபிடிக்கப்படும்.
தற்போது இந்த ரோபோவில் ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.