வாட்ஸ் அப்பில் இனி ரகசிய சாட்டிங் செய்யலாமுங்கோ!

வாட்ஸ் அப்பில் இனி ரகசிய சாட்டிங் செய்யலாமுங்கோ!

ர்வதேச அளவில் முன்னணி தகவல் தொடர்பு செயலியாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்திய பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு புதுமைகளை இணைத்து வருகிறது. பயனாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு கூடுதல் அம்சங்கள் தொடர்ச்சியாக அப்டேட்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் முக்கியமான மற்றும் ரகசியம் என நாம் கருதும் உரையாடல்களை இனி மற்றவர்கள் பார்வையிலிருந்து எளிதில் மறைக்கலாம். தனிப்பிட்ட ரகசியக் குறியீட்டினை உள்ளிடுவதன் மூலம், நாம் மட்டுமே அந்த சாட்டிங்கை அணுக முடியும். வாட்ஸ் அப் பயனர்களின் பாதுகாப்புக்கான புதிய ஏற்பாடாக, இந்த அப்டேட்டினை வாட்ஸ் அப்பின் மெட்டா நிறுவனம் வெளியிடுகிறது.

வாட்ஸ்அப் சேட்டுகளின் பிரைவசியை பாதுகாக்க சேட்டுகளை லாக் செய்யும் சீக்ரெட் கோட் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சேட்களை பாஸ்வோர்ட் அமைத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கு பாஸ்வேர்டுகளாக எண்களையோ அல்லது எமோஜிக்களையோ பயன்படுத்த முடியும்.இதன் மூலம் குறிப்பிட்ட சாட்டிங் ஒன்றை பிரத்யேகமாய் பூட்டுப் போடலாம். தனிப்பட்ட ரகசியக் குறியீடுகளை உள்ளிடுவதன் மூலம் நாம் மட்டுமே அந்த சாட்டிங்கை மீண்டும் அணுகலாம். இதை அடுத்து சீக்ரெட் கோட் மூலம் லாக் செய்யப்பட்ட அல்லது மற்றவர் பார்வையில் மறைக்கப்பட்ட அரட்டைகளை நாம் மட்டுமே எளிதில் அணுக முடியும். இதற்கு மொபைலின் லாக் குறியீடு/பாஸ்வேர்ட் அல்லாத, தனி ரகசியக் குறியீட்டினை அமைத்துக் கொள்ளலாம். மனைவி கையில் தனது அலைபேசி தவழும்போது கூட, கவலையின்றி கணவரால் இனி புன்னகைக்க முடியும்.

மேலும் லாக் செய்யப்பட்ட குறிப்பிட்ட சாட்டிங் வரிசைகள், பிரதான சாட்டிங் பட்டியலிலிருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். அதனை மீண்டும் அணுக வாட்ஸ்அப்பின் தேடல் பட்டியில், ரகசியக் குறியீட்டை டைப் செய்தால் போதும்; லாக் செய்யப்பட்ட அரட்டைகள் மறைவிடத்திலிருந்து கண்சிமிட்டி காட்சியளிக்கும்.இந்த புதிய அப்டேட் மூலம் ரகசிய சாட்டிங்கை விரைந்து பூட்டிடுவதும் எளிது. குறிப்பிட்ட அரட்டையை சற்று கூடுதல் நேரம் அழுத்திப்பிடித்தால் போதும்; அது தானாகவே பூட்டுபோட்டுக்கொண்டு மறைவிடத்தில் பதுங்கி விடும்.

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர் வரும் மாதங்களில் படிப்படியாக உலகின் அனைத்து பிராந்தியங்களுக்கும் இது நடைமுறைக்கு வர உள்ளது. சமூக ஊடக செயலிகள் பலவும், பயனருக்கான தனியுரிமைக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. அவற்றின் வரிசையில் வாட்ஸ் அப்பும் களமிறங்கி உள்ளது. வாட்ஸ் அப் புதிய அப்டேட் மூலம் நமது ரகசிய அரட்டைகளை பூட்டுபோட்டு பாதுகாத்துக்கொள்வது எளிதாகக்கூடும்; அதே போன்று நம் கண்காணிப்புக்குரிய சிறாரின் ரகசிய அரட்டைகளுக்கான நமது கவலை மேலும் பெரிதாக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!