என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது! – மகளிர் இட ஒதுக்கீடு!

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது! – மகளிர் இட ஒதுக்கீடு!

களிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது போல மகிழ்ச்சியில் பொங்கி விட்டீர்களோ?��

மின்னல் வேகத்தில் செயல் முடிப்பது மோடி சர்க்கார் ஸ்டைல் என்பதால் அப்படி நம்பினேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதிகள் சீரமைப்பு நடந்து, அப்புறம் ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிந்து, அதன் அடிப்படையில் உள் ஒதுக்கீடு நடந்து, அதற்கு பிறகு தான் மகளிர் ஒதுக்கீடு அமலுக்கு வருமா?

2029 தேர்தலில் அமலாகுமாம். அதற்கும் உத்தரவாதம் இல்லை. இவ்வளவு பெரிய மேட்டரில் அத்தனை ரகசியம் பூசி சபையை கூட்டியபோதே something fishy என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

எதை எடுத்தாலும் சந்தேகம் கொள்வது ஒரு நோய் என்பீர்களே?

சென்சஸ் எடுப்பது 10 வருடத்துக்கு ஒரு முறை நடந்தாக வேண்டும். 2021 ல் நடக்க வேண்டியது கோவிட் காரணமாக நடக்கவில்லை. எப்போது நடக்கும் என்பதை இன்னும் சொல்லவில்லை. அதனால் சந்தேகத்தை தவிர்க்க இயலவில்லை.

கொடுப்பது போல் காட்டி, கொடுக்காமல் போவார்களோ என்கிற சந்தேகமா? இல்லை. *மாற்றுப்பாதையில் செல்லவும்* போர்டு தான் மகளிர் ஒதுக்கீடு மசோதாவா என்ற சந்தேகம். போர்டுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தால் தெரிந்து விடும் தானே?

பார்த்தேன்,. ஆழமாக தோண்டுவது தெரிகிறது. எதற்காக என்பது விடியலில் தெரியும்.

கதிர்

error: Content is protected !!