ரயிலில் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு!
ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. முன்னதாக ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை இருந்தது. ஆனால் இதுபற்றி பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் பகலில் இருக்கையில் சிலர் தூங்குவதாக அடிக்கடி புகார்கள் வருவதையடுத்து ரயிலில் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி .படுக்கை வசதி தொடர்பாக ஏற்கனவே விதிகள் உள்ளது. தற்போது, அதனைத் தெளிவுபடுத்துவதற்காக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. படுக்கை வசதி கொண்ட ரயிலில் கீழ் படுக்கையைப் பதிவு செய்தவர்கள் உடனடியாக படுத்து கொள்வதால், நடு வரிசை படுக்கை மற்றும் மேல் படுக்கைக்கு செல்பவர்களும் சீக்கிரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, பயணிகள் தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் படுக்கையை முன்பதிவு செய்தவர்கள், கீழ் படுக்கையை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உரிமை கொண்டாட முடியாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும். படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து ரயில்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துm.
இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


