அமெரிக்காவின் யூ-டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவின் யூ-டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு!

தினந்தோறும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ப்ரூனோ பகுதியில் யூடியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சூசைட்  செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் யூ-டியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அந்த அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் மேலும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் யார்? எதற்காக யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் ரிப்போர்ட்:

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். சான் தியேகோ நகரைச் சேர்ந்த நசிம் அக்தாம் என்பவர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். தீவிர சைவ கொள்கைகளை கடைப்பிடித்த நசிம் அக்தாம் விலங்குகள் உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் கொல்லப்படுவதை தீவிரமாக எதிர்த்து பரப்புரை செய்து வருபவர். யூடியூப் தளத்தில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கிய நசிம் அக்தாம், தனது கொள்கை மற்றும் பாரசீக கலாச்சாரங்களை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

நசிம் அக்தாம் கணினியில் உள்ள பதிவு

இந்நிலையில், சமீப காலமாக அவரது சேனலில் பதிவிடும் வீடியோக்களின் பார்வைகளுக்கு (views) ஏற்ப யூடியூப் நிர்வாகம் வருமானத்தை பகிர்ந்து தருவது இல்லை என அக்தாம் கருதியுள்ளார். இதற்கேற்ப, தனது கணினியில் இது தொடர்பான பதிவுகளை அவர் வைத்துள்ளார். இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களுக்கும், நசிம் அக்தாமுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. எனவே, மேற்கண்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நசீம் அக்தாமுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.