Zoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு!

Zoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு!

ஜூம் -மில் மேற்கொள்ளப்படும் கால்கள் மற்றும் அனுப்பப்படும் தரவுகள் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்சன் செய்யப்பட்டுள்ளதா எனக் கேட்டால் `இல்லை’ என்பதால் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் இந்த பயன்பாட்டை பயன் படுத்த தடை விதித்துள்ளன . ஆனாலும் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் சூழலில், அலுவலக கூட்டம், மாணவர்களுக்கு பாடம் என பல பணிகளும் ஜூம் செயலி மூலம் நடத்தப்படுகின்றன. ஜூம் வீடியோ செயலி மூலம் ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 100 நபர்களுடன் காணொளியில் சந்திக்கும் வசதி உள்ளது.

குறிப்பாக கட்டண திட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்கவும் மற்றும் பதிவு செய்யும் வசதி போன்றவற்றால் ஜூம் செயலி அனைவருக்கும் ஏற்றதாக மாறிவிட்டது. இதனால், ஜூம் வீடியோ செயலி மூலம் ஈட்டப்படும் வருவாய் முந்தைய காலாண்டைவிட 27 கோடி அதிகரித்துள்ளது. பிப்ரவரி- ஏப்ரல் இடைப்பட்ட காலாண்டில் 169 விழுக்காடு வரை அதிகரித்து 2,471 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டியுள்ளது.

2021-ஆம் ஆண்டில் Zoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து சுமார் 14, 000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என அமெரிக்காவின் நாஸ்டாக் கணித்துள்ளதாக்கும்.