32°C
விளம்பரம்
Advertisement

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை – சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!

admin சேலம் Published: April 10, 2019 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்த வழக்கில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேற்படி ஆவணங்கள் மீதான விசாரணை கண்டிப்பாக நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்ப தாகவும் அதை தீர விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என சுப்ரிம் கோர்ட் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது மீண்டும் விசாரணையை நடத்தியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோர் ‌அமர்வு இதனை விசாரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதாவது ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர். குறிப்பாக் ‘தி ஹிந்து’செய்தித் தாளில் வெளியான ஆவணங்களும் விசாரணையின் போது எடுத்துகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழக்கின் விசாரணையின்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த பாதுகாப்புத்துறையின் ஆவணங்களின் நகல்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ஹிந்து பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் வேணுகோபால் தெரிவித்தார். மேலும் பாதுகாப்புத்துறையின் ‌ரகசிய ஆவணங்களை நகலெடுத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்