அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுக் கல்வி: சவுதி அரசு பர்மிஷன்
சவுதி அரேபிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு விரைவில் விளையாட்டுக் கல்வி அறிமுகப்ப டுத்தப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்ட விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கல்வித்திட்டம் இருக்கும் என்றும் கல்வி அமைச்சகம் தெரவித்துள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் வாகனங்களை ஓட்ட அங்கு அனுமதி இல்லை. அவர்கள் வெளிநாடு செல்லவோ, பாஸ்போர்ட் பெறவோ அவர்களின் கணவன் அல்லது தந்தையின் அனுமதி பெறவேண்டும்.
ஆனாலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. சவுதி அரேபியா பெண்கள் குழு 2012ம் ஆண்டில் தான் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது என்பது நினைவுகூரத்தக்கது.இந்நிலையில், சவுதி அரேபிய அரசுப்பள்ளிகளிலும் மாணவிகள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று பரவலான கருத்து ஏற்பட்டுள்ளது.


