பொங்கலுக்கு முன்னரே முதல்வராகிறார் சசிகலா?

பொங்கலுக்கு முன்னரே முதல்வராகிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலராகப் பதவியேற்ற சசிகலா விரைவில் முதல்வராவார் என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். புத்தாண்டையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மூவரும் அஞ்சலி செலுத்தினர்.

sasi jan 2

இதையடுத்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம், “ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்த சசிகலா அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார்.எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்களை கட்டிக் காக்கும் உன்னதமான பொறுப்பை சசிகலா ஏற்றுள்ளார். அதிமுகவினர் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் சிறந்த உரையை சசிகலா ஆற்றியுள்ளார். சசிகலா திறம்பட பணியாற்றுவார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் சிறப்பான வளர்ச்சியடையும். தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் கட்சியை நடத்திச் செல்வோம் என்ற உறுதிமொழியை அவர் எடுத்துள்ளார், அவருக்கு உண்மை தொண்டர்கள் துணையாக இருப்பார்கள். சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் அவர் முதல்வராக மக்கள் பணியாற்றுவார்” என்றார்

கடம்பூர் ராஜூ பேசும் போது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அவர்களின் மகத்தான வழியில்தான் அதிமுக இன்றுவரை பயணித்திருக்கிறது.இனியும் அதே வழியில்தான் வீறுநடைபோடும் என்று சசிகலா பேசியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவரது உரை மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் முதல்வராகவும் வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.” என்றார்

சேவூர் ராமச்சந்திரன், “அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றிருப்பது அதிமுகவினருக்கு மகிழ்ச்சி. இதைபோல், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்றார், ,இதையடுத்து வரும் பொங்கலுக்கு முன்னதாகவே சசிகலா முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், பின்னரே ஆர்.கே. நகர் அல்லது தென்னகத்தில் உள்ள ஒரு த்ஜொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்றும் போயஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி அமைச்சரவையில் பெருத்த மாற்றம் செய்வதற்கான ஆஅசோசனையும் நடந்து வருவதாக தெரிகிறது..

இதனிடையே சசிகலாவின் முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் அது குறித்து வெளியான தகவலிது: உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.

உரை விஷயத்தில் திருப்தி அடைந்த பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம்.

ஜெயலலிதாவை போல் கடைசியில் சொல்ல குட்டிக்கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தாகவும், ஆனால் கடைசியில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார் என்றும் கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!