ரயில் நிலையங்களுக்கு உள்ளும் வெளியும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் மற்றும் காண்டம் விற்பனை!

ரயில் நிலையங்களுக்கு உள்ளும் வெளியும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் மற்றும் காண்டம் விற்பனை!

பல டைப்-பிலான போக்குவரத்துகள் இருந்தாலும் கூட ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக இடம் உள்ளது. நடுத்தர வகுப்பினர் சௌகரியமாக தொலைதூரங்களுக்கு பயணிக்க ரயில்களே உறுதுணையாக உள்ளன.ரயில் போக்கு வரத்தை விரிவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதையொட்டி ரயில்வே வாரியம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பொதுமேலாளர்கள் அனைவருக்கும், மல்டி பர்பஸ் ஸ்டால் எனப்படும் பன்னோக்கு அங்காடிகளை ரயில் நிலையங்களில் தொடங்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை அனுப்பியதும் இந்த கடை களில் பயணிகளுக்குத் தேவைப்படுகின்ற பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதும் நினைவிருக்கும். இந்நிலையில் ரயில் நிலையங்களுக்கு உள்ளும் வெளியும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் மற்றும் காண்டம் ஆகியவற்றை விற்பனை செய்ய ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது.

நாட்டின் பல்வேறு ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் ரயில் நிலைய வளாகத்தில் சிறுநீரகம் மற்றும் மலம் கழித்தும் வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைகிறது. இதன் விளைவாக அங்கு வரும் மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகின்றது. மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு ரயில்வே வாரியம் ஒரு புதிய கழிவறை கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ரயில் நிலையங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் அமைத்துள்ளன.

கழிவறைகளில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கான சுகாதாரத்தை கருத்தில்கொண்டு சானிட்டரி நாப்கின் மற்றும் கருத்தடை சாதனங்களை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளது. குறைந்த விலையிலான சானிட்டரி நாப்கினை விற்பனை செய்யவது என புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்கீழ், ஒவ்வொரு ரயில் நிலையத்தின் உள்ளும் வெளியும் என இரண்டு இடங்களில் இவை விற்பனை செய்யப்படும்.

கழிவறைகளின் தூய்மையை பராமரிக்க 3 பேர் நியமிக்கப்படுவர். ஆண்களின் கழிவறைகளை சுத்தம் செய்ய ஒரு ஆண் ஊழியரும், பெண்களின் கழிவறைகளை சுத்தம் செய்ய ஒரு பெண் ஊழியரும், இதைத்தவிர ஒரு மேற்பார்வையாளரும் இந்த புதிய கொள்கையின்படி நியமிக்கப்படுவர்.

எக்ஸ்டரா நியூஸ்

நம் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கூட மருந்தகம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!