இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடி இழப்பு!

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடி இழப்பு!

நம் நாட்டில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடியை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

இந்தியா வங்கிகளில் மோசடிகள் முக்கியமான போலி ஆவணங்கள் பெற்றுக்கொண்டு கடன் அளித்தது மற்றும் போலியாக ஏதேனும் காரணங்களைக் கொண்டு வங்கிகள் பணம் பெறுவது என்பது அNமைகாலங்களில் அதிகரித் துள்ளதாக முன்னரே தகவல் வெளியான நிலையில் மோசடிகளால் இந்திய பொதுத் துறை வங்கிகள் இழந்த தொகை குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியான தகவலில் இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகள் 2017-18 நிதியாண்டில் மொத்தம் ரூ.25,776 கோடியை இழந்துள்ளன. இதில் நான்கில் ஒரு பங்கு இழப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி கொண்டுள்ளது. அவ் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.13,700 கோடிக்கும் மேல் மோசடி செய்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இவ்வங்கி சென்ற நிதியாண்டில் பல்வேறு மோசடிகள் வாயிலாக மொத்தம் ரூ.6,461.1 கோடியை இழந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,224.9 கோடியை இழந்துள்ளது.

வங்கி மோசடிகளில் ஆந்திரா பேங்க், யூ.சி.ஒ. பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் ரூ.1,000 கோடிக்கு மேலான இழப்புகளைப் பெற்றுள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,224.9 கோடியையும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.1,928.2 கோடியையும், அலகாபாத் பேங்க் ரூ.1,520.4 கோடியையும் இழந்துள்ளன.

முன்னதாக ரிசர்வ் வங்கியிடம் இதுபோல, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை யில், இந்திய வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,000க்கும் மேலான மோசடி வழக்குகளைக் கண்டிருந்ததாகவும், அதன் வாயிலாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழந்திருந்ததாகவும் கூறியிருந்தது. 2017 ஏப்ரல் 1 முதல் 2018 மார்ச் 1 வரையில் மொத்தம் 5,152 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பில் நடைபெற்ற மோசடிகள் மட்டுமே இங்குக் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதே வங்கிகளில் குறைந்த அளவில் பணம் மோசடிகள் நடைபெற்றதன் மூலமாகச் சில நூறு கோடிகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!