காமன்வெல்த் விளையாட்டு போட்டி- தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டி- தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்தியா அறிவித்திருந்தது. இதில் தமிழக வீரர்களை தனலட்சுமி 200 மீட்டர் தடகளம் மற்றும், ரீலே போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் 2022 காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யாவும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!