ரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்?

ரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்?

ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியில் இருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் 2036 வரை பதவி வகிப்பதற்காக மக்களிடம் கடந்த ஜுலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 77.93% மக்கள் புதின் அதிபராக தொடருவதற்கான விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து 2036-ஆம் ஆண்டு வரை புதின் ரஷ்யா அதிபராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 68 வயதான புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது பார்க்கின்சன் (மூளையின் ஒரு பகுதி சிதைவு) என்ற நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அவரது கை மற்றும் கால்களில் வலியை உணருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் புதின் மகள்களான மரியா மற்றும் கத்ரினா டிகோனோவா ஆகியோர் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை அதிபர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தி வருவதாகவும் இதனால் அவர் அடுத்தாண்டு அதிபர் பதவியிலிருந்து விலக கூடும் என்று கூறப்படுகிறது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

பார்கின்சன் நோய் என்பது ஒரு சீரான நரம்பு மண்டல கோளாறு ஆகும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உடலின் இயக்கத்தை பாதிக்கும். கை நடுக்கத்துடன் ஆரம்பிக்கும் இது படிப்படியாக வளர்ந்து உடல் விறைப்புத்தன்மையை உண்டாக்கும். சமநிலை தவறி தடுமாறி விழும் நிலை ஏற்படும். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும் துணை சிகிச்சைகளான பிசியோதெரபி மற்றும் சில மருந்துகள் மூலம் அறிகுறிகளின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம்.

error: Content is protected !!