உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்!- கேரளா தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்!- கேரளா தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று, அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாக பரவியதால் நாடு முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தற்போது பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதியை அம்மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 8 -ம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 10 -ம் தேதி 2 -ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 14 -ம் தேதி 3 -ம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது.

உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 16-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது.

Related Posts