பெப்சி தேர்தல்: ஆர்.கே.செல்வமணி & அவரது அணியே இப்போதும் அமோக வெற்றி!

பெப்சி தேர்தல்: ஆர்.கே.செல்வமணி & அவரது அணியே இப்போதும் அமோக வெற்றி!

கோலிவுட்டின் பவர்ஃபுல் யூனியனான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற ழைக்கப்படும் பெப்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று பெப்சி தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க உரிமை உடையவர்கள் 66 பேரில் 65 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். 22 யூனியன்களை உள்ளடக்கிய பெப்சியில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும் அங்கமுத்து சண்முகம் செயலாளராகவும் பி.என்.சுவாமி நாதன் பொருளாளராகவும் இருந்தனர். இவர்கள் மூவரும் அவர்கள் வகித்து வந்த, பதவிக்கு மீண்டும் போட்டியிட்டனர். அதில் தலைவர் பதவிற்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி – 49 வாக்குகள் பெற்று இவருக்கு எதிராக போட்டியிட்ட டி.கே.மூர்த்தி வென்றார். செயலாளர் அங்கமுத்து சண்முகம் – 50 வாக்குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் – 15 வாக்குகளும் பெற்றனர்.  பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுவாமிநாதன் – 47 வாக்குகளும் எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஆர். சந்திரன் – 18 வாக்குகளும் பெற்றனர். மேலும் ஆர்.கே.செல்வ மணியின் அணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 6.00 மணி அளவில் அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து பெப்சி சார்பில் வெளியான செய்தி குறிப்பில் , “22 யூனியன்களை உள்ளடக்கிய பெப்சியில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும் அங்கமுத்து சண்முகம் செயலாளராகவும் பி.என்.சுவாமிநாதன் பொருளாளராகவும் இருக்கின்றனர்.

இவர்கள் மூவரும் அவர்கள் வசிக்கும் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டனர்.

தலைவர்

ஆர்.கே.செல்வமணி – 49
அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே.மூர்த்தி – 16

செயலாளர்
அங்கமுத்து சண்முகம் – 50
இவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் – 15

பொருளாளர் பதவிக்கு
B.N.சுவாமிநாதன் – – 47
எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஆர்.. சந்திரன் – 18

முன்னதாக ஆர்.கே.செல்வமணியின் அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட
தீனா
ஷோபி பவுல்ராஜ்
ஶ்ரீதர்
செந்தில்குமார்
ராதாகிருஷ்ணன்
ஐவரும்

இணைச் செயலாளர்கள் Uதவிக்கு போட்டியிட்ட
ஆர்.எஸ்.ராஜா
சபரி கிரீசன்
ரமண பாபு
சம்பத் குமார்
ஸ்ரீபிரியா
ஐவரும்
போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் செயலாற்றினார்

இன்று மாலை 6.00 மணிக்கு வடபழனி நூறடி சாலையில் உள்ள பெப்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

error: Content is protected !!