ரிலையன்ஸ் ஜியோ சிம் – கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட்!

ரிலையன்ஸ் ஜியோ சிம் – கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட்!

இன்னைக்கு கூட்டம் கூட்டமா இளைஞர்கள், யுவதிகள் போய் க்யூவில நிக்கிற இடங்கள் இருக்குன்னா அது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூம்கள்ன்னு சொல்லலாம். எல்லா ஷோரூம்கள்லயும் கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு சில இடங்கள்ல தள்ளுமுள்ளுவும் நடந்துகிட்டு இருக்கு. இன்னைக்கு சனிக்கிழமைங்கிறதால வங்கிகள் சாஃப்ட் வேர் நிறுவனங்கள் எல்லாம் விடுமுறைங்கிறதால பெரும்கூட்டம் இந்த ஷோரூம்களை நோக்கி ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க..

rio aug 27

அப்படி என்னதான் இருக்கு அந்த சிம்ல வசதிகள்ன்னு பாத்தா இப்போதைக்கு அவங்க சொல்லியிருக்கிற விஷயங்களும் வசதிகளும் வேறு எந்த நெட்வொர்க்கும் இதுவரை தரலைங்கிறதுதான்.. சரி இவங்களோட இந்த சர்வீஸ் எப்படி இருக்கும். 3மாசம் ப்ரீன்னு சொல்றாங்க. அதுக்கப்பறம் மத்த நெட்வொர்க் மாதிரிதான் டேரிஃப் இருக்குமா? மார்க்கெட் பிடிக்கறதுக்காக இப்படி எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனம் செய்யுதா? இப்படி பல்வேறு கோணங்களில் பல்வேறு கேள்விகள் எழாமல் இல்லை.

இப்போதைக்கு மூனு மாசத்துக்கு டேட்டா,ரோமிங், அவுட்கோயிங் கால்கள், வீடியோ டவுன்லோடு எல்லாம் இலவசமாக தர்றாங்க. வாங்கி யூஸ் பண்ணனும்னு நினைக்கிறவங்க யூஸ் பண்ணலாம். 3மாசத்துக்கு பிறகு டாரிஃப் அதிகமா இருந்தா வேணாமுன்னு டீஆக்டிவேட் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.. சரி இந்த நெட்வொர்க்கோட ஸ்பெஷாலிட்டி என்ன, இந்த சிம் எப்படி வாங்கறது? என்னென்ன டாகுமென்ட்ஸ் கொடுக்கனும்கிறத விரிவா பாக்கலாம்..

4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடஃபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இருக்காது, எனவே 4G ஐ டேட்டாவுக்கும் வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்திட்டு வர்றாங்க. அதனாலதான் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தொழில் நுட்பமான VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்து இருக்கு. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேசிக்க முடியும்.

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Vo-lte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்கும்னு நம்பலாம். ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவையை கடந்த டிசம்பர் 2015 லேயே தொடங்கிடுச்சு. ஆரம்பத்திலே தனது நிறுவனத்தில் வேலை பார்க்கறவங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைல்களை கொடுத்திருக்கு.

சோதனை ஓட்டம் Beta Testing

கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம். இதுல ஓரளவு வெற்றியும் கிடைச்சிருக்கு. feed back ல யாரும் குறை சொல்ற அளவுக்கு நெட்வொர்க் இல்ல. ரொம்ப நல்ல ஸ்பீடுல வொர்க்பண்றதா சொல்லியிருக்காங்க.

LYF Mobile Volte சப்போர்ட்

இதுமட்டுமில்லாம ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ.3000 முதல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த மொபைல் வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது. இப்போ சாம்சங், எல்.ஜி. மற்றும் பிற வகை பிராண்டுகள்ல 4ஜி ஆப்ஷன்ஸ் இருக்கிற மொபைல்களுக்கு இந்த சிம்களை கொடுக்க ஆரம்பிச்சிருக்கு ரிலையன்ஸ் நிறுவனம்.

JIofi2 மோடம்

ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wi-fi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் போட்டுகிட்டு வெளியே எளிதாக எடுத்து செல்லலாம். பயன்படுத்திக்கலாம்.

இந்த மோடமும் ஆகஸ்டு 1 ம் தேதியிலிருந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்துகிட்டு வர்றாங்க, இதற்கும் 3 மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்திக்கலாம்.

சரி இந்த இலவச சிம் பெறுவது எப்படி?

கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 1 ஃபோட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செஞ்சு அதில் Get Jio sim என்ற லிங்க்கை க்ளிக் செஞ்சா உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யனும், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் . பிறகு அந்த Coupon Code ஐ ஸ்க்ரீன் ஷாட் மற்றும் பிரின்ட் அவுட் எடுத்து அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிக்கனும் . ஆக்டிவேசன் ஆக 4 அல்லது 5 நாட்கள் வரை கூட ஆகலாம்.

ஆக்டிவேஷன் எப்படி பண்றது?

ஆக்டிவேஷனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஜ் வந்தவுடன் உங்கள் சிம்மை ஃபோனில் போட்டுக்கலாம். உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்கனும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்ங்க. கால் போகலேன்னா உங்கள் மொபைல் True 4G Support இல்லைன்னு அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்ங்க, ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்க.

My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test.netஎன்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிஞ்சுக்கலாம்.

சரி என்னதான் தர்றாங்க எப்படித்தான் தர்றாங்கங்கிற சந்தேகம் தீரனும்னா ஒரு சிம் வாங்கிப்பாத்துடுங்களேன். நல்லா செயல்பட்டா மத்த நெட்வொர்க் டேரிஃப்பைவிட கம்மியா இருந்தா கன்ட்டினியூ பண்ணலாம் இல்லேன்னா டீஆக்டிவேட் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். எந்த நிபந்தனையோ ஒப்பந்தமோ ரிலையன்ஸ் ஜியோ இதுவரை வாடிக்கையாளர்கிட்ட சொல்லலை, போடலைங்கிறது கூடுதல் தகவல்..

உதயகுமார்

error: Content is protected !!