ஸ்டேட் பேங்கில் ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸ்கியுட்டிவ் ஜாப் தயார்!

ஸ்டேட் பேங்கில் ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸ்கியுட்டிவ் ஜாப் தயார்!

பாரத ஸ்டேட் வங்கியில் 554 சிறப்பு மேலாண்மை நிர்வாகி(SME) பணியிடங்களுக்கு ஆன்லைனில் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எம்ஜிஎஸ் III கிரேட் பொறுப்புக்கு 273 பேரும், எம்எம்ஜிஎஸ் II கிரேட் படத்துககு 282 பணிணிடங்களுக்கும் நேரடி தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்..

sbi may 5

கல்வித்தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/ஏசிஎஸ்/எம்பிஏ (நிதி நிர்வாகம்) அல்லது அதற்கு நிகரான நிதித்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

குறிப்பு: முதுகலைப்படிப்பை இரண்டு ஆண்டுகள் முழுநேரக்கல்லூரியில் படித்திருக்க வேண்டும். அஞ்சல் வழியிலோ அல்லது, பகுதி நேரமாகவோ முதுக்கலைப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கத் தகுதியில்லை. முழுநேர முதுகலைப்படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் படித்திருக்க வேண்டும்.

சிறப்பு மேலாண்மை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் ஆப்ஜக்டிவ் தேர்வு நடைபெறும். குரூப் தேர்வு மற்றும் குழு நேர்முகத் தேர்வும் நடைபெறும். ஆன்லைன் தேர்வில், பொதுஅறிவு/வங்கி தொடர்பான கேள்விகள், பகுத்தறிதல், ஆங்கிலம் மற்றும் நிதி தரவு விளக்கம் மற்றும் பகுப்பாய்வு உள்ளிட்டவைகள் குறித்தும் தேர்வு இருக்கும்.

விண்ணப்பதாரர்கள், அஹமதாபாத், பரோடா, பெங்களூரு. சென்னை மதுரை, கொச்சி, திருவனந்தபுரம், மைசூர், ஹைதராபாத், கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு எழுதலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.05.2017

எழுத்து தேர்வு நாள்: 18.06.2017

எழுத்து தேர்வுக்கு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய வேண்டிய நாள்: 06.06.2017

மேலும் விவரங்களை ஆந்தை வழிகாட்டி என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

error: Content is protected !!