சதர்ன் ரயில்வேயில் பாரா மெடிக்கல் பிரிவுகளில் பணிவாய்ப்பு!

சதர்ன் ரயில்வேயில் பாரா மெடிக்கல் பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை என்றும் அழைக்கப்படும் தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை (Southern Railway Headquarters Hospital, Chennai), சென்னையின் அயனாவரத்தில் அமைந்துள்ள தெற்கு இரயில்வேயின் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இது 15 ஏக்கர்கள் (6.1 ha) பரப்பளவில் பரவியுள்ளது. இது பிரித்தானியர்கள் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை 15 அடிப்படை பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 3 பிரிவுகளில் மேம்பட்ட நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்த தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., மருத்துவமனைகளின் பாரா மெடிக்கல் பிரிவுகளில் 143 காலி பணியிடங்கள் (குரூப் ‘சி’) நிரப்பப்பட உள்ளன. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 19.

பணி விபரம்

செவிலியர் கண்காணிப்பாளர்- 69

பார்மசிஸ்ட் -22

பிசியோதெரபிஸ்ட்- 2

லேப் அசிஸ்டன்ட்- 18

இ.சி.ஜி., டெக்னீசியன் – 3

சைக்காலஜிஸ்ட்- 1

ஹெல்த் இன்ஸ்பெக்டர்- 20

ரேடியோகிராபர்- 4

பெர்ப்யூஷனிஸ்ட்- 1

எலக்ட்ரானிக் டெக்னீசியன்- 1

எக்கோ டெக்னீசியன் – 2

தகுதிகள் ?

ஓய்வு பெற்ற ஊழியர்கள் கட்டாயமாக ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. ஏதாவது செய்த தவறு அடிப்படையில் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது.

வயது வரம்பு

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 65 வயதை அடையும் மாதத்தின் கடைசி நாள் வரை பணிபுரியலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!