நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ‘கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி’ பிரிவில் 259 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலியிடம்: மெக்கானிக்கல் 125, எலக்ட்ரிக்கல் 65, இ.சி.இ., 10, சிவில் 5, கன்ட்ரோல் & இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கம்ப்யூட்டர் 5, மைனிங் 5, ஜியாலஜி 5, நிதி 14, ஹெச்.ஆர்., 10 என மொத்தம் 259 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளான ஜியாலஜி பிரிவுக்கு (எம்.டெக்.,/எம்.எஸ்சி.,), நிதி (சி.ஏ.,/எம்.பி.ஏ.,), ஹெச்.ஆர்., (ஹெச்.ஆர்., /பிசினஸ் மேனேஜ்மென்ட்/பிசினிஸ் அட்மினிஸ்ட்ரேசன்) முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.3.2020 அடிப்படையில் பொது 30, ஓ.பி.சி., 33, எஸ்.சி.,/எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன், எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. செயல்பாட்டுக்கட்டணம் ரூ. 354. எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.354 மட்டும்.
கடைசி நாள்: 17.05.2020
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு



