ஏஐ சாட்பாட் உதவியுடன் வேலை தேட தயாரா?

ஏஐ சாட்பாட் உதவியுடன் வேலை தேட தயாரா?

ங்களுக்காக வேலை தேட ஒரு சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம் அல்லது உங்கள் சார்பில் வேலை தேடும் பொறுப்பை ஏஐ சாட்பாட்டிடம் ஒப்படைக்கலாம். கல்வித்தகுதி, திறன்கள், அனுபவம் உள்ளிட்ட அம்சங்களை சாட்பாட்டிடம் தெரிவித்து, நீங்கள் எதிர்பாக்கும் வேலையின் தன்மையையும் குறிப்பிட்டால் போதும்,சாட்பாட்டே அதற்கேற்ப ரெஸ்யூம் தயார் செய்து அல்லது ஏற்கனவே நீங்கள் தயாரித்த ரெஸ்யூமை பட்டைத்தீட்டி தயார் செய்து விடும். அடுத்த கட்டமாக, எங்கெல்லாம் வேலை வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து, உங்கள் சார்பில் விண்ணப்பிக்கவும் செய்யும். நீங்கள் ஏற்பதை அல்லது நிராகரிப்பதை மட்டும் செய்யலாம்.

இது கற்பனை தான் என்றாலும், ஏறக்குறைய இதே போன்ற சேவையை வழங்கும் இணையதளம் ஒன்று இருக்கிறது. கெட்ஜாப்மேட் (https://www.getjobmate.com/) எனும் அந்த தளம், பயனாளிகள் சார்பில் ரெஸ்யூம்களை சரி பார்த்து, அவர்கள் சார்பாக பொருத்தமான வேலைக்கு விண்ணப்பிக்கும் சேவையை வழங்குவதாக சொல்கிறது. விண்ணப்பிக்கும் முன், பயனாளிகளிடம் அனுமதி கேட்டுக்கொள்கிறது.

வேலை தேடுவதை எளிதாக்குவதாக இந்த சேவை கூறுகிறது. இது செயல்திறன் மிக்க செயலா அல்லது வேலை தேடலை பொறுப்பற்ற முறையில் அணுகுவதா:? என்று தெரியவில்லை. எல்லாம் தானியங்கிமயமாகி வரும் காலத்தில் இத்தகைய சேவைகள் அறிமுகமாவதை தவிர்ப்பதற்கில்லை.

நிற்க, வேலை தேட ஏஐ சாட்பாட்டை உருவாக்கிய பின், பாட்டாக ஒரு வேலையை தேடி, இது நல்ல வேலை, உடனே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டு இதில் சேரவும் என பரிந்துரைத்தால் எப்படி இருக்கும். பரிந்துரைப்பதோடு நில்லாமல் பயனர் சார்பில் ஏஐ சாட்பாடே பணி விலகல் கடிதமும் அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? இதுவும் கற்பனை தான் என்றாலும், ஏஐ கால விபரீதங்களுக்கான உதாரணமாக கருதலாம்.

சைபர்சிம்மன்

error: Content is protected !!