ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ சாத்தியம் உள்ளது – ரிசர்வ் வங்கி தகவல்!

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ சாத்தியம் உள்ளது – ரிசர்வ் வங்கி தகவல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால் ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி, கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு CAIT கடிதம் எழுதி இருந்தது.

இந்த கடிதம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்று தெரிவித்தது. எனவே, ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ரூபாய் நோட்டுகள் பாக்டீரியாக்கள் மற்றும் கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை தாங்கிச் செல்லக் கூடியவை. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் முறைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற பல்வேறு ஆன்லைன் டிஜிட்டல் சேவைகள் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பணம் செலுத்தலாம். முடிந்தவரை ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!