ரயில் பயணத்திற்கு இனி டிஜிட்டல் அடையாள அட்டை போதும்!

ரயில் பயணத்திற்கு இனி டிஜிட்டல் அடையாள அட்டை போதும்!

தற்போது பலராலும் எளிதாக செய்யப்படும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ரயில் பயணத்தின்போது அசல் அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மறந்துவீட்டில் வைத்து விட்டோம், அலுவலகத்தில் வைத்து விட்டோம் என்று நடுவழியில் கவலைப்படவும் தேவையில்லை. ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் டிஜிட்டல் பதிப்பை ரயில்வே இனி ஏற்றுக்கொள்ளும்.

அதாவது, நம்முடைய ஸ்மார்ட்போனில், மத்தியஅரசின் டிஜி லாக்கர் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து அதில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது. இந்த டிஜிட்டல் ஆவணங்களை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதுமானது, அசல் அடையாள அட்டை தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்களுக்கும், முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ”ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவரிடம் ரயில் பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகர் அடையாள அட்டையைக் காண்பிக்கக் கூறினார். இனி, மத்திய அரசின் டிஜிலாக்கரில் இருக்கும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் காண்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படும், அவை அங்கீகாரமான அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பாக அனைத்து மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

அதேசமயம், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டையை ஒரு பயணி தானாகவே பதிவேற்றம் செய்து அதை அடையாள அட்டையாகக் காண்பித்தால் அது அங்கீகாரமற்ற அடையாள அட்டையாகக் கருதப்படும். டிஜிலாக்கரில் இருந்து மட்டுமே அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிலாக்கர் திட்டம் மூலம், ஒருவர் டிஜிட்டல் முறையில், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பல்வேறு வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவேற்றமும் செய்யலாம்

Related Posts

error: Content is protected !!