புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ‘வீடு’!

புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய  நிகழ்ச்சி ‘வீடு’!

புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு புதிய நிகழ்ச்சி வீடு. வீடு என்பது உறைவிடம் என்பது மட்டுமல்ல. அது குடும்பத்தினரின் உணர்வோடு கலந்துவிட்ட ஒரு பகுதி யாகும். பண்டை காலம் தொட்டு வீட்டுக்கு என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. அந்த அமைப்பு புவியில், தொழில் , மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவங்களை கொண்டிருந்தன. . காலப்போக்கில் அந்த வீடுகள் வழங்கொழிந்து ஒரே தன்மை வடிவங்களாக மாறின. தனிவீடுகள் என்ற காலம் போய் தொகுப்பு வீடுகள் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மக்கள் தொகை பெருக்கம் நகரநெருக்கடியும் வீட்டுக்கான வறையறைகளை மாற்றியமைத்து விட்டன. ஆனாலும் குடிசையாக இருந்தாலும் கோபுரமாக இருந்தாலும் அதற்கென்று இருக்கவேண்டிய சிறப்புக்கூறுகள் இருக்கின்றன. அதனை அறிந்து காட்சிப்படுத்த முயற்சி செய்கிறது வீடு என்ற இந்த புதிய நிகழ்ச்சி.

பாரம்பரிய வீடுகள், மாற்றுவீடுகள், சுற்றுச்சூழலை பேணும் வீடுகள், அனைவருக்கும் ஏற்ற வீடுகள், பட்ஜெட் வீடுகள், மண் வீடுகள், என்று பல்வேறு வகையிலான வீடுகளை தமிழகம் முழுக்கச்சென்று காட்சிப்படுத்த இருக்கும் இந்த நிகழ்ச்சி நமது புதிய தலைமுறையில் சனிக்கிழமை 4:30 மணிக்கும் மறுஒளிபரப்பு ஞாயிறு காலை 10:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் விஷ்ணு பரத் .

Related Posts

error: Content is protected !!